Last Updated : 21 Jun, 2022 08:47 AM

 

Published : 21 Jun 2022 08:47 AM
Last Updated : 21 Jun 2022 08:47 AM

சேதி தெரியுமா?

ஜூன் 10: மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் அலுவலக வெளியை ஏற்படுத்திய உலகின் முதல் அமைப்பு என்ற அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பெற்றது.

ஜூன் 11: விலங்குகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘அனோகோவாக்ஸ்’ என்கிற முதல் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

ஜூன் 11: நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஆர். பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் ஈட்டி சாம்பியன் ஆனார்.

ஜூன் 12: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) பொறுப்புத் தலைவராக தேர்வாணைய உறுப்பினர் சி. முனியநாதன் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 13: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ‘எண்ணும் எழுத்தும்’ எனும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது.

ஜூன் 14: ஆயுதப் படைகளில் இந்திய இளைஞர்களைப் பணியமர்த்தும் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஜூன் 15: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் வாக்களிக்கும் உறுப்பினராகவும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 17: நிலவில் தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x