Last Updated : 03 May, 2022 07:44 AM

 

Published : 03 May 2022 07:44 AM
Last Updated : 03 May 2022 07:44 AM

சேதி தெரியுமா?

ஏப்.22: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

ஏப்.23: ஓராண்டில் ஆறு முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாள் கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஏப்.25: ஊட்டியில் தமிழகப் பல்கலைக்கழகம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார்.

ஏப்.25: தமிழகத்தில் பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தர் பொறுப்பை வகிக்கும் ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

ஏப்.26: 6 - 12 வயது வரையுள்ள சிறார்களுக்கு கோவேக்சின் கரோனா தடுப்பூசியைச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

ஏப்.26: ட்விட்டர் நிறுவனத்தை சுமார் ரூ.3.10 லட்சம் கோடி கொடுத்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.

ஏப்.27: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது என்கிற குழப்பத்துக்குள் செல்லாமல் நீதிமன்றமே ஏன் விடுதலை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஏப்.28: மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மல்யுத்த அணி 1 தங்கம், 5 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்று ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x