Last Updated : 22 Mar, 2022 07:35 AM

 

Published : 22 Mar 2022 07:35 AM
Last Updated : 22 Mar 2022 07:35 AM

சேதி தெரியுமா?

கரோலினா பிலாவ்ஸ்கா

மார்ச் 14: அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்க நிலம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மார்ச் 15: கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 16: பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மார்ச் 16: இந்தியாவில் 12 - 14வயதினருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

மார்ச் 16: 2022ஆம் ஆண்டுக்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்தது.

மார்ச் 17: மருத்துவ மேல் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மார்ச் 17: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக போலந்து நாட்டின் கரோலினா பிலாவ்ஸ்கா தேர்வானார்.

மார்ச் 18: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். 7 ஆண்டு களுக்குப் பிறகு ரூ. 7 ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x