Published : 22 Feb 2022 07:20 AM
Last Updated : 22 Feb 2022 07:20 AM
பிப்.13: வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய ஒளிப்படங்களை நாசா வெளியிட்டது. இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதி உணவுப் பொருளான பீட்சா தோற்றத்தில் காணப்பட்டது.
பிப்.14: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிப்.14: கோவாவில் ஒரே கட்டமாக 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 79.61 சதவீத வாக்குகள் பதிவாயின.
பிப்.14: உத்தராகண்டில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 65.37 சதவீத வாக்குகள் பதிவாயின.
பிப்.15: ரயில்வே துறை சார்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மல்யுத்த அகாடமியை டெல்லியில் அமைக்க அத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
பிப்.19: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாயின.
பிப்.19: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு 2023-ஆம் ஆண்டு மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கூட்டம் இந்தியாவில் நடக்க உள்ளது.
பிப்.20: பஞ்சாப்பில் ஒரே கட்டமாக 117 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT