Last Updated : 28 Sep, 2021 03:18 AM

 

Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

சேதி தெரியுமா?

செப்.19: திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டி.இ.எஸ். ராகவன், தாகூரின் ‘கோரா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன் ஆகியோர் 2020-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

செப்.20: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். முன்னதாக உட்கட்சிப் பிரச்சினை காரணமாக கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

செப்.21: ஜப்பானைச் சேர்ந்த 107 வயதான இரட்டைச் சகோதரிகள் உமேமோ சுமிம்மா, கவுமே கோடமா ஆகியோர் உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

செப்.21: கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. ஜஸ்டின் ட்ரூடோ 2015 முதல் அந்நாட்டுப் பிரதமராக இருந்துவருகிறார்.

செப்.22: சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மகாத்மா காந்தி கோட், சூட் அணிவதைத் துறந்து, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

செப்.22: தமிழகத்தில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்வா யினர். புதுச்சேரியில் முதன் முறையாக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.யானார்.

செப்.23: தமிழகத்தின் கோவளம், புதுச்சேரியின் ஏடென் ஆகிய கடற்கரைகள் உலகப் புகழ்பெற்ற நீலக்கொடிச் சான்றிதழைப் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் இச்சான்றிதழைப் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.

செப்.23: தோகாவில் நடைபெற்ற ஸ்னூக்கர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். இது அவர் வெல்லும் 24-ஆவது பட்டமாகும்.

செப்.24: பெருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்.25: இந்திய விமானப் படையின் தளபதி பதவுரியா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x