Last Updated : 17 Aug, 2021 03:14 AM

 

Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

சேதி தெரியுமா?

ஆக. 7: டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். விடுதலை பெற்ற பிறகு தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.

ஆக.7: ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆக.8: டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 48-வது இடத்தை இந்தியா பிடித்தது. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.

ஆக. 9: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 619 விக்கெட்டுகளுடன் 3ஆம் இடத்திலிருந்த அனில் கும்ப்ளேவை ஆண்டர்சன் பின்னுக்குத் தள்ளினார்.

ஆக.9: தமிழ்நாட்டின் நிதி நிலைமையையும் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாகவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆக.11: இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஆக.12: குஜராத்தில் அங்கலேஷ்வர் எனும் இடத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஆக.13: திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதன் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கலானது.

ஆக.14: தமிழ்நாடு வரலாற்றில் சட்டப்பேரவையில் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x