Published : 15 Jun 2021 10:05 AM
Last Updated : 15 Jun 2021 10:05 AM
ஜூன் 5: கரோனா காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஜூன் 5: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை யான ஜப்பானின் நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரி லிருந்து மனநலப் பிரச்சினைகள் காரணமாக இடையிலேயே விலகினார்.
ஜூன் 5: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.
ஜூன் 6: ஆசிரியர் தகுதித் தேர்வின் (டெட்) சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.
ஜூன் 6: எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகளும், டி20 உலகக் கோப்பையில் 20 அணிகளும் பங்கேற்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
ஜூன் 7: நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ஜூன் 8: தமிழக இந்து சமய அறநிலையத் துறை அலுவலகக் கோப்புகள், கோயில் சொத்துகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயப்
படுத்தும் பணிகள் தொடங்கின.
ஜூன் 8: மத்திய அரசு வெளியிட்ட எத்தனால் கொள்கையில், 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூன் 9: 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT