Last Updated : 18 May, 2021 08:55 AM

 

Published : 18 May 2021 08:55 AM
Last Updated : 18 May 2021 08:55 AM

சேதி தெரியுமா?

மே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது.

மே 10: தமிழகச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 11: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

மே 12: தமிழகச் சட்டப்பேரவையின் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

மே 12: தமிழகச் சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும், தமிழக அரசு கொறடாவாக கோ.வி.செழியனும் நியமிக்கப்பட்டனர்.

மே 13: இந்திய ராணுவத்தில் முதன்முறையாகக் காலாட்படை பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டனர். 1990 முதல் பெண்கள் அதிகாரி நிலையில் மட்டுமே பணியமர்த்தப் பட்டுவந்தனர்.

மே 14: ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் பாட்மிண்டன் ஓபன் ரத்து ஆனதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x