Published : 12 Jan 2021 12:53 PM
Last Updated : 12 Jan 2021 12:53 PM
ஜன. 1: தமிழக மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். பாஸ்கரன் பொறுப்பேற்றார்.
ஜன. 1: ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது இரண்டு ஆண்டு பதவிக் காலத்தைத் தொடங்கியது. ஐ.நா. சபையில் சக்தி வாய்ந்த இடத்தை இந்தியா பெறுவது இது 8-வது முறை.
ஜன. 2: இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.
ஜன. 3: ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் 2023-ம் ஆண்டில் விண்ணுக்கு மரத்தாலான செயற்கைக்கோள்களைச்
செலுத்த உள்ளனர். விண்வெளியில் சேர்ந்துவரும் மறுசுழற்சி செய்ய முடியாத எச்சங்கள் குறித்த சிக்கலுக்கு இது தீர்வாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 4: கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிந்துரைசெய்தது.
ஜன. 5: லடாக்கில் முதல் வானிலை ஆய்வு மையத்தை மத்திய அரசு திறந்தது. 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக உயர்ந்த வானிலை ஆய்வு மையம் இது.
ஜன. 5: 2021-ம் ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கோவிட்-19 இரண்டாவது அலைப் பரவலால் தனது பயணத்தை ரத்துசெய்தார்.
ஜன. 6: ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச நாள் அரசுப் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT