Last Updated : 13 Oct, 2020 08:59 AM

 

Published : 13 Oct 2020 08:59 AM
Last Updated : 13 Oct 2020 08:59 AM

சேதி தெரியுமா?

அக். 1: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. எஞ்சிய 5 மாவட்டங்களான மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலையில் அக். 16 முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

அக். 2: வி.வி.ஐ.பி.க்கள் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்துள்ள பி- 777 விமானம் இந்தியா வந்தது. அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன. இந்த விமானத்தில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பயணிப்பார்கள்.

அக். 5: 2020 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்ட்டர், சார்லஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாவ்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக். 6: இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு கருந்துளை பற்றிய ஆய்வுக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பென்ரோஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக். 6: முழுவதும் சூரிய ஒளியால் செயல்படுத்தப்படும் முதலாவது விமான நிலையமாக புதுச்சேரி விமான நிலையம் மாறியது. இங்கே நாள்தோறும் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப் படுவதால், ரூ. 10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகும்.

அக். 7: வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸைச் சேர்ந்த இமானுயேல் ஷார்பென்டியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக அறிவிக்கப்பட்டது.

அக்.8: பிழையில்லா கவித்துவக் குரலும் அழகும் பொருந்திய கவிதைகளுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளக்குக்கு அறிவிக்கப்பட்டது.

அக். 8: லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) காலமானார். எட்டு முறை மக்களவைக்கும் ஒரு முறை மாநிலங்களவைக்கும் தேர்வானவர். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்ஸ்ரீகன் சிங், மோடி என 6 பிரதமர்களின் அமைச்சரவையில் இவர் அங்கம் வகித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x