Last Updated : 29 Oct, 2025 07:26 AM

 

Published : 29 Oct 2025 07:26 AM
Last Updated : 29 Oct 2025 07:26 AM

கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 24

கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது. அது தற்போது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் அண்ட் நாட்டிக்கல் இன்ஜினியரிங் (சிப்நெட்) என்கிற பெயரில் செயல்படுகிறது.

1968ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்திலும் 1981ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடல் மீன்பிடிக் கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், இன்ஜினி யர்கள், இன்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் இது.

நாட்டிக்கல் சயின்ஸ்: இங்கு பேச்சலர் ஆஃப் ஃபிஷரிஸ் சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்கிற பிஎஃப்எஸ்சி நான்கு ஆண்டு கடல் அறிவியல் படிப்பு உள்ளது. மீன்பிடித் தொழில்நுட்பங்கள், மீன்பிடிக் கப்பலை இயக்குதல் போன்ற மீன்பிடிக் கப்பலை வழிநடத்தத் தேவையானவற்றைக் கற்றுத் தரும் படிப்பு இது. பல்வேறு வகையான மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடிக் கப்பலை வடிமைக்கும் முறை, நேவி கேஷன், இன்ஜின்களை இயக்குதல், ஓசனோகிராபி.

மரைன் மெட்ரியாலஜி, மீன்பிடித்தல், மீன்களைப் பதப் படுத்துதல்… இப்படி மீன்பிடித் தொழில் தொடர்பான பல்வேறு தொழில் நுட்பங்கள் கற்றுத்தரப்படும். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு கொச்சி யில் உள்ள கொச்சி அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் அனுமதி பெற்ற படிப்பு இது.

பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்ற அறிவியல் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றி ருக்க வேண்டும். பட்டியலின, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றி ருந்தால் போதும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் மெர்சென்ட் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, மருத்துவரீதி யாக உடல்தகுதி பெற்றிருக்க வேண் டும். நல்ல கண் பார்வையும் அவசியம்.

நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புகளில் சேரத் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்வி கள் கேட்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களி லிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

நுழைவுத் தேர்வுக்கு 50 சதவீத மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீத மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு சிறந்த மாணவர்கள் இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இங்குத் தங்கிப் படிக்க வேண்டியிருக்கும். இங்கு படித்து முடிக்கும் மாணவர்கள் மத்திய மீன்வள நிறுவனங் களிலும் மாநில மீன்வளத் துறையிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடிக் கப்பல்களிலும் வேலை கிடைக்கும். மீன்பிடிக் கப்பல் தொடர்பான பணிகளில் ஆர்வம்மிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு இது.

பயிற்சிப் படிப்புகள்: சிப்நெட் மையத்தில் வெசல் நேவிகேட்டர் கோர்ஸ் (VNC), மரைன் பிட்டர் கோர்ஸ் (MFC) ஆகிய இரண்டு பயிற்சிப் படிப்புகளைப் படிக்கலாம். இந்த இரண்டு ஆண்டுப் படிப்பில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சேரலாம். அந்த மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 40 சதவீத மதிப் பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்தப் படிப்பில் சேர உடல்தகுதியும் நல்ல கண் பார்வையும் அவசியம்.

இப்படிப்பில் சேர்வதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் உதவித்தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இங்குத் தங்கிப் படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுடையவர்கள் இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப் படுவார்கள்.

இந்த இரண்டு ஆண்டுப் படிப்பை முடித்த மாணவர்கள் மீன்பிடிக் கப்பல் பணியில் சேரலாம் அல்லது மீன்பிடித் துறைமுகத்தில் ஃபிஷ்ஷிங் கியர் மானுபாக்சரிங் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளில் சேரலாம். இப்பணியில் சேருபவர்கள், பணி அனுபவம் பெற்ற பிறகு, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஸ்கிப்பர், தலைமைப் பொறியாளர் பணிவரை பதவி உயர்வு பெறவும் வாய்ப்புகள் உண்டு.

ஷோர் மெக்கானிக் கோர்ஸ் (12 மாதங்கள்), ஃபிஷிங் டெக்னாலஜி (12 மாதங்கள்), ஃபிஷரிஸ் டீச்சர் டிரெயினிங் (6 மாதங்கள்) ஆகிய துணைநிலைப் படிப்புகளையும் சிப்நெட் நடத்துகிறது. இதுதவிர ஃபிஷிங்டெக்னாலஜி, ரேடார் அப்சர்வர் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சிப் படிப்புகளும் உண்டு.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x