Published : 24 Sep 2025 06:42 PM
Last Updated : 24 Sep 2025 06:42 PM
செப்.17: வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
செப்.17: ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
செப்.18: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
செப்.18: அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழகக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.18: பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
செப்.19: ஊட்டி, கொடைக்கானலைப் போல வால்பாறைக்கு செல்ல நவ.1 முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.20: நாட்டின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டது.
செப்.20: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாத மமக, கொமதேக உள்ளிட்ட 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
செப்.20: கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கியது. ஏற்கெனவே 2015இல் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு எதிர்ப்பு எழுந்தததால், புதிய கணக்கெடுப்பு நடக்கிறது.
செப்.21: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ. 1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
செப்.22: புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் 2.0 இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி இனி 5%, 18% என்கிற இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும்.
செப்.22: பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை இரண்டாமிடத்தைப் பிடித்தது.
செப்.23: அமைச்சர் துரைமுருகன், அவருடைய மனைவி சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT