Published : 16 Sep 2025 05:41 PM
Last Updated : 16 Sep 2025 05:41 PM
செப்.9: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் 452 வாக்குகளும், ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்களும் பெற்றனர்.
செப்.9: நேபாளத்தில் இளம் தலை முறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
செப்.12: நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
செப்.12: நேபாள நாட்டின் இடைக்கால பிரதமராக சுசீலா காகி பதவியேற்றார்.
செப்.13: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி தமிழக மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
செப்.13: இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
செப்.14: உலகில் முதல் முறையாக மூங்கிலிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலையை அசாமின் கோலாகாட மாவட்டத்தில் நுமாலிகர் பகுதியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
செப்.15: வக்பு சட்டத் திருத்தத்துக்கு முழுவதுமாக இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT