Published : 09 Sep 2025 04:55 PM
Last Updated : 09 Sep 2025 04:55 PM
செப்.2: ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப்.2: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெற்றார்.
செப்.4: குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி அடுக்குகளான 5%, 18% வரி விகிதங்கள் செப்.22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
செப்.4: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவனங்கள் இல்லை என்றால் தண்டனையிலிருந்து கருணை அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
செப்.4: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யபப்ட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
செப்.5: தமிழகத்தில் கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
செப்.5: தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக (டிஎம்இ) சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டார்.
செப்.6: லண்டனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்துஜா குழுமத்துடன் ரூ.7500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
செப்.6: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையர் போட்டியின் மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
செப்.7: பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியின் தென் கொரிய அணியை 4 – 1 என்கிற கோல்கள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது.
செப்.7: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
செப்.8: ஃபேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
செப்.8: புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்யாவின் தேசிய கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும் ஏங்கல் ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றது.
செப்.8: ஆதார் அட்டையை 12ஆவது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.8: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT