Published : 19 Aug 2025 12:23 PM
Last Updated : 19 Aug 2025 12:23 PM
ஆக. 12: முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆக.12: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆக.13: போராட்டம் என்கிற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
ஆக.13: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்து வைத்தது.
ஆக.14: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட 6 புதிய திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆக.14: ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலை தூர மலை கிராமத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்.
ஆக.14: பிஹார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர், காரணத்தை வெளியிட வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.14: ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலுடன் போரிட்ட எல்லைப் பாதுகாப்பு படையின் 16 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆக.14: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் பட்டம் வென்றார்.
ஆக.15: சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
ஆக.15: நாகாலாந்து ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் (80) சென்னையில் காலமானார்.
ஆக.16: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான ஜவுளி மில் உள்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆக.16: பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெரு வெள்ளத்தில் சிக்கி 344 பேர் உயிரிழந்தனர்.
ஆக.17: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
ஆக.18: பிஹார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர், விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ஆக.18: ராணுவ பயிற்சிப் பள்ளிகளில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் துணிச்சல்மிகு வீரர்களை ஓரங்கட்டி வீட்டுக்கு அனுப்பாமல் முப்படை அலுவலங்களில் உட்கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஆக.18: அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.18: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால், அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT