Published : 08 Jul 2025 03:17 PM
Last Updated : 08 Jul 2025 03:17 PM
ஜூன் 30: தெலங்கானா மாநிலம் சிகாச்சி ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 1: திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்தது.
ஜூலை 1: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஜூலை 1: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் பெண் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
ஜூலை 1: பார் கவுன்சில், மருத்துவ கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள முக்கிய அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உயரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 4: குரேஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்சல்னை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் வீழ்த்தினார்.
ஜூலை 5: பரஸ்பர ஒப்பந்தம் செய்யாத 12 நாடுகளுக்கு வரி விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
ஜூலை 5: நடப்பாண்டில் (2025-26) மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
ஜூலை 5: ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்கு மேல் ரன் குவித்தவர் என்கிற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரின் சாதனையை இந்திய கேப்டன் ஷுப்மன் கில் சமன் செய்தார். இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கில் 269, 161 ரன்களைக் குவித்தார்
ஜூலை 6: உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரும் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
ஜூலை 6: கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டி மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி அமெரிக்காவின் யோஸ்லின் பெரேஸை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஜூலை 6: உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT