Last Updated : 18 Mar, 2025 03:53 PM

 

Published : 18 Mar 2025 03:53 PM
Last Updated : 18 Mar 2025 03:53 PM

தமிழ்நாடு பட்ஜெட் முதல் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 11-17

மார்ச் 11: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதிகள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தினார்.

மார்ச் 11: பாகிஸ்தானில் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மார்ச் 13: தமிழகத்தில் மதுபானக்கூட உரிமம், போக்குவரத்து டெண்டர் உள்பட டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 13: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் (₹) குறியீட்டுக்குப் பதிலாக ‘ரூ’ இடம் பெற்றது.

மார்ச் 13: விண்வெளியில் வலம்வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை (Undocking) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

மார்ச் 13: இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரையிசை பயணத்தைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு அவருக்குப் பாராட்டு விழா நடத்தும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மார்ச் 13: கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுதொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

மார்ச் 13: தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

மார்ச் 14: தமிழக சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

மார்ச் 14: தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.9 லட்சம் கோடி வரை உள்ளதாக நிதித் துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 14: வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக ரூ.1.55 கோடி நிதி பெற்ற வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மார்ச் 15: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

மார்ச் 15: சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

மார்ச் 17: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.

மார்ச் 17: ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மார்ச் 17: சந்திரயான் - 5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x