Published : 04 Mar 2025 04:44 PM
Last Updated : 04 Mar 2025 04:44 PM
பிப்.26: தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என்பது மிகவும் கடுமையானது என்றும் 6 ஆண்டுகள் தடையே போதுமானது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பிப்.26: சென்னை தரமணி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்தது.
பிப்.26: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் 65 கோடிப் பேர் திரிமேனி சங்கமத்தில் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்தது.
பிப்.27: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் குற்றப் பத்திரிகைகள் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்கிற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிப்.27: ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
பிப்.27: வக்பு சட்ட திருத்த மசோதாவில் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தது.
பிப்.28: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
பிப்.28: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக பி. அமுதா நியமிக்கப்பட்டார்.
பிப்.28: பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதவி புரி புச் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டார்.
மார்ச் 1: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அமெரிக்க – உக்ரைன் இடையேயான ஒப்பந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. உக்ரைன் குழு உடனடியாக வெளியேற்றப்பட்டது.
மார்ச் 2: நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கேரள அணியை வீழ்த்தி விதர்பா அணி கோப்பையை வென்றது
மார்ச் 2: அமெரிக்க அதிபர் ரிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை அமெரிக்க நிறுத்தியது.
மார்ச் 2: பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 3: இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதை தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 3: சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘எமிலியா பரேஸ்’ என்கிற பிரெஞ்சு மொழி படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் இல்லாத பிற மொழி என்கிற சாதனையைப் படைத்தது. ‘அனோரா’ என்கிற படம் 5 விருதுகளை வென்றது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT