Published : 29 Jan 2025 06:10 AM
Last Updated : 29 Jan 2025 06:10 AM
உடல் ஆரோக்கியமும் உணவுப் பழக்கமும் ஒன்றி லிருந்து இன்னொன்று பிரிக்க முடியாத சங்கிலி. பள்ளிக் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏதேனும் ஒரு மாணவர் வெயிலில் சோர்வடைந்து மயங்கி விழுவது உண்டு. அந்த மாணவரை விசாரித்தால், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதும், காலை உணவைத் தெரிய வரும். பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பேருந்தை உரிய நேரத் தில் அடைய, காலை உணவை உட்கொள்வதில்லை.
உடல் ஆரோக்கியம்: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுடன் தினசரி முட்டையும் பயறு வகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவரும் காலை சிற்றுண்டித் திட்டம் மாணவர்களிடம் உண்ணும் ஆர்வத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இது மட்டுமன்றி அரசுப் பள்ளிகளில், குறிப்பாக ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வாரந்தோறும் இரும்புச் சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்தி ரைகள் கட்டணமின்றி கிடைக்கின்றன என்பதா லேயே பல மாணவர்கள் உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.
பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து சென்றாலும் அரசின் பங்களிப்பு ஏதேனும் ஒரு வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதை முன்னெடுத்து வருகிறது. ஆனால், கல்லூரிப் படிப்பின்போது மாணவர்கள் எந்த வகையான உணவு உட்கொள்கிறார்கள், போதிய ஊட்டச்சத்தைப் பெறுகிறார்களா என்பது கேள்விக்குறி.
கவனம் தேவை: பெரும்பாலான கல்லூரி விடுதி களில் வழங்கப்படும் உணவு வகைகள் முறையாகச் சமைக்கப் படாத, முழுவதும் வேகாத உணவு வகைகளாக, காரம் கொண்டவை யாக இருக்கின்றன. இதனால் ஏனோதானோ என்று மாணவர் கள் உணவைச் சாப்பிட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் செயல்படும் உணவகங்களிலும் சமோசா, பீட்சா, பர்கர், பப்ஸ், பரோட்டா, நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பானிபூரி, பேல்பூரி எனத் துரித உணவுக்கலாச்சாரத்தை மையப் படுத்தியே விற்பனை செய்யப்படுகிறது.
விடுதியில் வழங்கப்படும் உணவு சரியில்லாத பட்சத்தில் மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் அவ்வப்போது கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே சென்று உணவு உட்கொள்கிறார்கள். ஆனால், விடுதி விதிமுறைகளால் மாணவிகளுக்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், வேறு வழியில்லாமல் விடுதிகளில் வழங்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ள வேண்டியுள்ளது.
வெளி உணவகங்களில் உணவு வாங்கிச் சாப்பிட முடியும் என்கிறபோதும் ஆரோக்கியமான உணவு வகை களைத்தான் உட்கொள்கிறார்களா என்பது அவரவர் உணவு முறைத் தேர்வில் அடங்கியிருக்கிறது. பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் பழ வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவகங்கள் செயல்படுவதில்லை.
விடுமுறை நாள்களில் மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது பெற்றோ ரின் கவனிப்பால் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டு இழந்த ஊட்டச்சத்தைப் பெறு வதற்கு முயற்சி எடுக்கின்றனர். என்றபோதும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு தங்கள் உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து “உலர் பருப்பு வகைகள் பாதாம், பிஸ்தா, கடலை மிட்டாய், சத்து மாவு, தேன் போன்றவற்றை மாணவர்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்.
“ஒரு சில கல்லூரி விடுதிகளில் கீரை, பருப்பு, முட்டை, இறைச்சி போன்ற உணவு வகைகளை வழங்கினாலும், அவை நன்கு வேக வைக்கப்பட்டிருந்தால் நல்ல பலனைத் தரும். உடல் உடல் சூட்டைத் தணிக்க அதிக அளவு நீரை அருந்துவதும் நல்லது. சிறிய மின் அடுப்பைப் (கெட்டில்) பயன்படுத்தி சத்துமாவில் சுடுநீர் கலந்து உருண்டை பிடித்துச் சாப்பிடலாம்.
இதையெல்லாம் ஒரு மாணவர் செய்யும்போது சக மாணவர்கள் கேலி பேசினால், அதை உதாசீனம் செய்திட வேண்டும். முதல் கட்டமாக மாணவர்களிடத்தில் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிர்வாகம் அடிப்படையில் சரியான உணவு வகைகளை வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் பழங்கள் விற்பனை செய்ய வேண்டும்” என்றார்.
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்; sasinageswari99@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT