Published : 10 Oct 2023 06:08 AM
Last Updated : 10 Oct 2023 06:08 AM
வகுப்பு, படிப்பு, தேர்வு எனப் பள்ளிப்பருவ மாணவர்களின் தினசரி வேலை ஒரு வழக்கத்துக்குப் பழக்கப்படுத்தப்படுகிறது. இதனால் தேர்வு பயம், தாழ்வு மனப்பான்மை, படிப்பில் ஈடுகொடுக்க இயலாமை போன்ற பிரச்சினைகளோடு மிக முக்கியமாக கவனச்சிதறல் பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் உடல்நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்துக்கும் தர வேண்டியது அவசியம்.
கவனச்சிதறல் அறிகுறிகள்: இந்தக் காலத்தில் வளரிளம் பருவத்தில் கவனச் சிதறல்கள் ஏற்பட அதிகக் காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகள், மாணவர்களுக்கு ஏற்படும் கவனச்சிதறல் பிரச்சினைக்கு உளவியலுடன் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. கவனச்சிதறல், மிகைச் செயல்பாடு பிரச்சினை ADHD (Attention Deficit Hyperactivity Disorder) என்று அழைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT