Published : 12 Sep 2023 06:12 AM
Last Updated : 12 Sep 2023 06:12 AM
பொதுவாக இன்றைய பெற்றோர் தங்களது குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே குறிவைத்து அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது சூழ்நிலைகளை மாற்றிக்கொள்கின்றனர். ஆனால், மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மனிதனின் தகுதிகளை முழுமையாக அளக்கக்கூடிய ஒரு கருவி அல்ல. என்றாலும், வெற்றி அடைவதற்கு ஓரளவு மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.
நினைவில் நிற்கும் படிப்பு: ஆழமான சுயசிந்தனையுடன் கூடிய கல்வியைப் படிப்பதன் மூலமாகவே பற்பல ஆராய்ச்சியின் வழியாக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். இவ்வுலகுக்கும் சமூகத்துக்கும் வாழ்வுக்கும் வளம் சேர்க்கும் பல ஆக்கபூர்வமான பணிகளை உருவாக்கித் தரமுடியும். பாடக் குறிப்புகள், டியூஷன், தேர்வுக்கு முன் வினாத்தாள்கள் வெளியாகாதா போன்ற எதிர்பார்ப்புகள் மாணவர்களை உண்மையான கல்வியிலிருந்து திசைதிருப்புகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT