Published : 05 Sep 2023 06:00 AM
Last Updated : 05 Sep 2023 06:00 AM
எண்களை 1, 2 என எண்களாகவே எழுதும்போது வராத சிக்கல், ஒன்று இரண்டு என எழுத்தில் எழுதும்போது சிலருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 10-பத்து, 11-பதினொன்று வரை வராத குழப்பம், 12, 13 எண்களை எழுத்தில் எழுதும்போது ‘பனிரெண்டா, பன்னிரண்டா?’, ‘பதிமூன்றா,பதின்மூன்றா?’ என சந்தேகம் வந்து விடுகிறது. குழப்பமே இல்லாமல் தவறாக எழுதுவதைவிடக் குழப்பம் நல்லதுதான்.
பனிரெண்டு என்பது தவறு, பத்து இரண்டு=பன்னிரண்டு என்று எழுதுவதே சரி. இதேபோல பதிமூன்று என்பதும் தவறு. பத்து மூன்று= பதின்மூன்று என்பதே சரி. இதேபோல, 23ஐ, இருபத்தி மூன்று என்று எழுதுவது தவறு. இருபத்து மூன்று என்பதே சரி. இவ்வாறே இவை போன்ற 33,44,55 போன்ற எண்களையும் எழுதுக. ‘எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு’ - எந்தப் பொருளை, எந்தச் சொல்லால் எவ்வாறு உயர்ந்தோர் சொன்னார்களோ அவ்வாறே நாமும் சொல்வதே மரபு என்று இதையும் சொல்லிவைத்திருக்கிறார்கள் (நன்னூல்-பொதுவியல்-37).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT