Published : 09 Sep 2017 09:49 AM
Last Updated : 09 Sep 2017 09:49 AM

மாற்றுப் பொருளில் கதவுகள்

வீ

ட்டுக்கு வீடு வாசப்படி வேண்டும். அதுபோலத்தான் கதவுகள். கதவுகள் வீட்டின் கரங்களைப் போல் விருந்தினர்களை வாஞ்சையுடன் வரவேற்கும். வீட்டின் அழகை முதலில் எடுத்தியம்பக்கூடியவை கதவுகள்தாம். அதனால் முன்பெல்லாம் கதவுகள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டன. இம்மாதிரியான வேலைப்பாடுகள் மரக் கதவுகளில் செதுக்கப்பட்டன. இன்று மரங்களும் அதிக விலையுள்ளதாககிவிட்டன. வேலைப்பாட்டுத் திறன் கொண்டவர்களும் அருகிவிட்டனர்.

அதனால் மரத்துக்கு மாற்றாகத் தற்போது ரீயின்போர்ஸ்டு பிளாஸ்டிக்கில் கதவுகள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன. மரக் கதவின் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. படாக், வேங்கை, பர்மா தேக்கு, நைஜீரியா தேக்கு எனப் பல வகைக் கதவுகள் சந்தையில் உள்ளன.

இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பட்ஜெட்டை வைத்துக் கதவு வாங்குவதை முடிவு செய்யலாம்.மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது. எனவே, விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிடக் கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடி இழைக் கதவுகளைப் பயனபடுத்தலாம். இவற்றின் விலை குறைவு. மேலும், கண்ணைக் கவரும் வகையில் பல டிசைன்களிலும் கிடைக்கின்றன. அசல் மரக் கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும். மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும். மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும். ஆனால், கண்ணாடி இழைக் கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை. இந்தக் கதவுகள் எல்லாக் காலநிலைகளையும் தாங்கக்கூடியவை. தண்ணீரால் பாதிக்கக்கூடியவையும் அல்ல.

குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை, உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும். குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைன்களிலும் வண்ணங்களிலும் வடிவமைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x