Last Updated : 19 Jul, 2014 10:53 AM

1  

Published : 19 Jul 2014 10:53 AM
Last Updated : 19 Jul 2014 10:53 AM

அடுக்குமாடி வீட்டில் உங்கள் மனையளவு என்ன?

தனியாக நிலம் வாங்கி வீடு கட்டும்போது நமக்கான இடம் பற்றிக் கவலையே இல்லை. ஆனால், ஒரு மனையில் 10 அல்லது 15 வீடுகளை கட்டி விற்றால், வீடு நிச்சயம நமக்கு சொந்தமாக இருக்கும். ஆனால், நமக்கான மனையின் அளவு எது என்ற கேள்வி எழும். இந்த இடத்தில்தான் எப்.எஸ்.ஐ. எனப்படும் ‘புளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்’ வழிகாட்டுகிறது. தமிழில் இதை ‘கட்டிடத் தளப் பரப்பு குறியீடு’ என்று சொல்வார்கள். இந்தக் குறியீட்டை வைத்துதான் எவ்வளவு இடம் என்பதைத் தீர்மானிப்பார்கள். முதலில் எப்.எஸ்.ஐ.யை எப்படிக் கணக்கிடுவது என்று பார்ப்போம்.

உதாரணமாக ஒரு பில்டர் 5 ஏக்கர் மனையில் 800 சதுர அடியில் 100 வீடுகள், 1200 சதுர அடியில் 200 வீடுகள், 1400 சதுர அடியில் 400 வீடுகள் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது எப்.எஸ்.ஐ.யை கணக்கிடுவோம்.

மொத்த வீடுகளின் பரப்பளவு சதுர அடியில் = 100x800+ 200x1200+ 400x1400 = 8,80,000 சதுர அடி

மனையின் மொத்த பரப்பளவு = 5 ஏக்கர்

சதுர அடியில் காலி மனை = 1 ஏக்கர் என்பது 43,560 சதுர அடி.

அப்படியானால் 5 ஏக்கர் = 5*43,560 = 2,17, 800 சதுர அடி.

இப்போது இந்தக் கட்டுமான திட்டத்துக்கான கட்டிடத் தளப் பரப்பு குறியீடு (எப்.எஸ்.ஐ) = 8,80,000 / 2,17,800 = 4.04

இந்த அடுக்குமாடி வீட்டுத் திட்டத்துக்கு 4.04 என்பதுதான் கட்டிடத் தளப் பரப்பு குறியீடு. ஆனால் இந்தக் கட்டிடத் தளப் பரப்பு குறியீடு ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். தமிழகத்தைப் பொறுத்தவரை 1.5 என்பதுதான் கட்டிடத் தளப் பரப்பு குறியீடாக உள்ளது. அப்படியானால் இதை வைத்துதான் தமிழகத்தில் வீடுகள் கட்டவும் முடியும். இதை வைத்துதான் அடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கும் மனையின் அளவு ஒதுக்கப்படும்.

உதாரணமாக தமிழகத்தில் ஒருவர் 700 சதுர அடி மனை வைத்திருப்பதாக கொள்வோம். கட்டிடத் தளப் பரப்பு குறியீடு 1.5ன் படி அந்த நபர் 400 முதல் 450 சதுர அடியில்தான் வீடு கட்ட முடியும். வீடு கட்ட அனுமதி அளிக்கும் அமைப்புகள் அதற்கு ஏற்பத்தான் அனுமதி வழங்குவார்கள். இதேபோல்அடுக்குமாடியில் 700 சதுர அடியில் வீடு என்று உங்கள் பில்டர் சொன்னால், உங்களுக்கான வீட்டின் அளவு 400 முதல் 450 சதுர அடியில்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x