Published : 14 May 2016 01:13 PM
Last Updated : 14 May 2016 01:13 PM
கோடைக்காலம் தொடங்கி விட்டாலேயே அடிக்கடி மின்தடையை எதிர்கொள்ள நேரும். மின்சாரம் இருந்தாலும் இரவு நேரங்களில் குறைவான மின்சாரமே வரும். இதற்கு முழுக்க அரசைக் குறைகூறிக்கொண்டிராமல் நாமும் கொஞ்சம் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முயலலாம். அனல் மின்நிலையம், காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கச் சொல்லவில்லை. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். அதாவது தேவையில்லாமல் மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.
எப்படிச் சிக்கனப்படுத்துவது?
# வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும்; மின் விளக்கு எரியும். இவற்றையெல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்கத் திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும். நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம்.
ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும். மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்துச் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார்கள் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.
# பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அநாவசியமாகச் செலவாகிறது. ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும்.
ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
# பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அநாவசியமாகச் செலவாகிறது. ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
# வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது. ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும்.
வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
# அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுவதைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிர விட வேண்டும். வெளிச்சம் தேவைப் படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.
# பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர்நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை மூடித் திறக்கும் தடவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.
# வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்குத் துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.
# மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த முடியும். சிறு துளிதான் பெரு வெள்ளம். நம் ஒவ்வொருவரின் சிறிய அளவிலான இந்தச் சேமிப்பு நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கப் பெரிய அளவில் காரணமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT