Published : 13 Feb 2016 11:25 AM
Last Updated : 13 Feb 2016 11:25 AM

கை கழுவும் கலன்கள்

மேற்கில் இருந்து நமக்குக் கிடைத்த ஒரு சாதனம் வாஷ்பேசின். கை கழுவுவதற்கான கலன். இந்தியாவில் கை கழுவுதற்கான தனியான கலன்கள் வீட்டின் உள்ளே பொருத்தப்பட்டடிருந்ததாகத் தெரியவில்லை. மேற்குலக நாடுகளில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தியாவில் சமீப காலத்தில் கை கழுவும் கலன்கள் வைத்து வீடுகள் கட்டப்படுவது பரவலாகி வருகிறது.

பெரும்பாலும் இந்த வகைக் கலன்கள் இரு விதமாகப் பயன்படுகிறது. சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்கும், சவரம், முகம் கழுவுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுகிறது. அதனால் சாப்பாட்டு மேஜைக்கு அருகிலும், குளியலறையிலும் வாஷ்பேசின் அமைப்பது பொதுவாக வழக்கத்தில் இருக்கிறது. இதில் பலவிதமான மாதிரிகள் உள்ளன. பல வடிவங்களிலும் கிடைக்கின்றன. தானாகத் தண்ணீர் வருவது போன்ற வகையிலும் இப்போது கலன்கள் கிடைக்கின்றன.

நிலைமேடைக் கலன் (Pedestal basins)

இது பெடஸ்டல் மின் விசிறி போல நின்ற நிலையிலான கலன். இந்த வகைக் கலன் பொருத்துவதற்கு எளிது. நின்ற நிலையில் உள்ள இதன் கீழே உள்ள பகுதி உள்ளீடற்றதாக இருக்கும். இதன் உள்ளே கை கழுவும் தண்ணீர் செல்வதற்கான குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வகைக் கலன் குளியலறைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

சுவர் கலன் (Wall hung basins)

இது சுவரில் பொருத்தும்படியான வாஷ்பேசின். பழைய காலத்தில் இந்த வகைக் கலன்களைப் பெரிய திருகாணிகளைக் கொண்டு சுவரில் பொருத்தியுள்ளார்கள். அலமாரிகளைச் சுவரில் பொருத்துவதுபோலச் சிரமத்துடன் பொருத்தியுள்ளனர். ஆனால் இப்போது எளிதாக இரு திருகாணிகளை வெளித் தெரியாத வகையில் பொருத்தினால் போதுமானது. இந்த வகை வாஷ் பேசின் பொருத்துவதற்கு எளிது. நின்ற நிலையில் உள்ள இந்த வாஷ்பேசின் குழாய் வடிவுக்குள் நீரும் வெளியேறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்தால் இந்த வகைக் கலனைச் சரிசெய்வது கடினம்.

மூலைக் கலன் (Corner basins)

இந்த வகைக் கலன், இரு சுவர்களும் சந்தித்துக்கொள்ளும் மூலையில் அமைப்படுவது. இந்த வகைக் கலன், இடநெருக்கடி உள்ள அறைகளில் பயன்படுத்த ஏதுவானது. அதிகமான இடத்தை அடைத்துக்கொள்ளாது. சிறிய அளவுகளில் கிடைக்கிறது. மற்றபடி இதைப் பொருத்துவது சுவர் கலன் போன்ற வழிமுறையில்தான்.

பொருத்து வகைக் கலன் (Recessed basins)

இந்த வகைக் கலன், சமையலறை களில் அங்கனங்கள் போன்றவை. மேடையின் மீது பொருத்திக்கொள்வது போன்ற அமைப்பு கொண்டது. குளியலறைக்கு ஏற்றவை இந்த வகைக் கலன்கள். ஏனெனில் இருபக்கத்திலும் ஷேவிங் க்ரீம், முகம் கழுவும் க்ரீம் போன்றவற்றை வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேல்நிலைக் கலன் (Counter top basins)

மேஜை மீது கலன்களை வைத்துப் பொருத்துவது போன்ற அமைப்பைக் கொண்டது இந்த வகைக் கலன். பொருத்து வகைக் கலனில் இருந்து சற்று மாறுபட்டது. இதுவும் குளியலைறைக்கு ஏற்றவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x