Published : 20 Feb 2016 12:07 PM
Last Updated : 20 Feb 2016 12:07 PM
சொந்த வீடு என்பது என் வாழ்வில் கானல் நீராகவே போய்க்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் பொறியியல் படித்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த என் மகன், கை கொடுத்தான். கையிருப்பில் இருந்த குறைந்த தொகையுடன் சிறிது கடனும் வாங்கி 4 சென்ட் அளவில் மனை வாங்கினோம். வீடு கட்டப் பணம் சிறிதும் இல்லாத நிலையில் ஒரு நிறுவனத்திடம் மனு செய்தோம். தீபாவளிக்கு முதல் நாள் முன் தொகை செக்காகக் கொடுத்தார்கள். அந்தத் தீபாவளி மறக்க முடியாத தீபாவளி ஆயிற்று.
மிகவும் சிக்கனமாக எந்த ஆடம்பரத் தேவைக்கும் இடம்கொடுக்காமல் அவசியத்துக்கு மட்டுமே செலவு செய்து வீடு கட்டி அதற்கு மகிழ்ச்சி இல்லம் என்று பெயரிட்டோம். புதுவீட்டுக்கு வந்தவுடன் நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாத என் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து என் மகனுக்குத் திருமணம், குழந்தைப்பேறு என்று அடுத்தடுத்து மங்கல நிகழ்வுகள்… எல்லாம் நம்பிக்கைதானே!
இந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கூடம்தான். என் மக்கள் மூன்று பேரும், மருமகள் பேரக்குழந்தைகள் என்று எல்லோரும் அமர்ந்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும், விவாதிப்பதும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் இங்குதான். இரவு தொலைக்காட்சியில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை நான் இங்கு இருந்துதான் ரசிப்பேன். எப்போதாவது மனம் சோர்ந்த வேளையில், இளையராஜாவின் திரை இசையைக் கேட்டு என்னை மீண்டும் சுறுசுறுப்பான ஆளாக மாற்றிக் கொள்வதும் இங்கேதான்.
நான் சிறுவனாக இருந்தபோது தஞ்சையில் வீட்டின் நடுக்கூடத்தில் மர ஊஞ்சல் இருப்பது என் நினைவில் ஆடிக்கொண்டிருந்தது. எனக்கு ஊஞ்சலாட மிகவும் பிடிக்கும். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல, எங்கள் வீட்டின் கூடத்திலும் ஒரு மூங்கில் ஊஞ்சலை மாட்டிவைத்திருக்கிறேன். இந்த ஊஞ்சலில் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது குழந்தையாக என்னை உணர்வேன். பல சமயங்களில் இந்த ஊஞ்சலில் ஆடுவதற்குப் பேரக்குழந்தைகளிடையே போட்டியே நடக்கும்.
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம்.நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.
நான் சிறுவனாக இருந்தபோது தஞ்சையில் வீட்டின் நடுக்கூடத்தில் மர ஊஞ்சல் இருப்பது என் நினைவில் ஆடிக்கொண்டிருந்தது. எனக்கு ஊஞ்சலாட மிகவும் பிடிக்கும். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல, எங்கள் வீட்டின் கூடத்திலும் ஒரு மூங்கில் ஊஞ்சலை மாட்டிவைத்திருக்கிறேன். இந்த ஊஞ்சலில் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது குழந்தையாக என்னை உணர்வேன். பல சமயங்களில் இந்த ஊஞ்சலில் ஆடுவதற்குப் பேரக்குழந்தைகளிடையே போட்டியே நடக்கும்.
பெயருக்கேற்ப வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. வெளியூருக்கு நான் சென்றாலும், இரை தேடச் செல்லும் பறவைகள் அந்தியில் கூடு திரும்புவது போல, கூடியமட்டும் விரைவாகத் திரும்பிவிடுவேன். தாயின் கர்ப்பத்தில் இருப்பது போன்ற உணர்வை இந்த வீடு எனக்குத் தந்துகொண்டிருக்கிறது.
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி சொந்த வீடு, தி இந்து |
|
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT