Published : 12 Dec 2015 12:34 PM
Last Updated : 12 Dec 2015 12:34 PM
சென்னை மிகப் பெரிய பேரிடரின் பாதிப்பில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்க்காத கன மழை, பலரையும் சொந்த ஊரிலேயே அகதிகளாக ஆக்கிவிட்டது. உடுத்த உடை, உண்ண உணவு எதுவுமின்றித் தவித்தனர். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் உதவிக் கரம் நீட்ட பலரும் அவர்களது வீடுகளில் தஞ்சம் அடைந்து உயிரைக் காத்துக்கொண்டனர்.
மழையால் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வந்த தங்கள் வீட்டுக்குத் திரும்ப எல்லோரும் ஆயத்தமாகியிருக்கிறார்கள். வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் வீடு வாழத் தகுதியானதாக இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டியது அவசியம். நீங்கள் செய்ய வேண்டியவை:
l வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் வீட்டை முதலில் நுழைந்து சுற்றியும் கவனமாகப் பார்க்க வேண்டும். வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட பாம்புகள், பூச்சிகள் வீட்டுக்குள் பதுங்கியிருக்கக்கூடும். அதனால். வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் கவனமாக விலக்கிப் பார்க்க வேண்டும். அவற்றை விரட்டிவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்க வேண்டும்.
l வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் வீட்டை முதலில் நுழைந்து சுற்றியும் கவனமாகப் பார்க்க வேண்டும். வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட பாம்புகள், பூச்சிகள் வீட்டுக்குள் பதுங்கியிருக்கக்கூடும். அதனால். வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் கவனமாக விலக்கிப் பார்க்க வேண்டும். அவற்றை விரட்டிவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்க வேண்டும்.
l வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு வீட்டின் மின் இணைப்பு பகுதிகளைக் கவனமாகச் சோதிக்க வேண்டும். வெள்ள நீரின் காரணமாக எங்காவது மின் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக ஸ்விட்ச் போர்டுகளை சோதித்துச் சரிசெய்ய வேண்டும். அதன் பிறகே மின்சாரத்தை இயக்க வேண்டும்.
l வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் வீட்டின் ஜன்னல்களைத் திறக்க வேண்டும். பூட்டப்பட்ட வீட்டில் அடைபட்டிருந்த அசுத்தமான காற்றை வெளியேற்ற வேண்டும். வெளியிலிருந்து வரும் சுத்தமான காற்று வீட்டுக்குள் நுழையவும் ஏதுவாக இருக்கும்.
l வீட்டில் கைவிடப்பட்ட பொருள்களைக் கவனமாகக் கையாளா வேண்டும். வெள்ள நீர் பாதிக்காத பொருள்களிலும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கக் கூடும். அதுபோல உணவுப் பொருள்களையும் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றை நன்கு சுத்தப்படுத்திப் பயன்படுத்துங்கள். சுத்தத்தை உறுதிசெய்ய முடியாத நிலையில் அவற்றை உபயோகப்படுத்தாமல் விட்டுவிடுவது நல்லது.
l வீட்டின் கழிவறையை உடனடியாக உபயோகிக்க வேண்டாம். நன்கு சுத்தப்படுத்திய பிறகு உபயோகிக்கத் தொடங்குங்கள்.
l வீட்டில் உள்ளே மின்சாதனப் பொருள்களையும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பவியலாளரைக் கொண்டு பரிசோதித்த பிறகு பயன்படுத்தத் தொடங்குங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT