Published : 21 Nov 2015 11:18 AM
Last Updated : 21 Nov 2015 11:18 AM
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவர் சீஸர் பெல்லி. ‘அமெரிக்கக் கட்டிடவியல் அமைப்பு, வாழும் உலகின் முக்கியமான கட்டிடக் கலைஞர்கள் பத்து பேரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஒருவர் சீஸர் பெல்லி. அர்ஜெண்டினாவில் துக்குமன் நகரத்தில் 1926-ம் ஆண்டு அக்டோபர் 12-ல் பிறந்தார்.
தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்துவருகிறார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் கட்டிடக் கலையில் பட்டம் பெற்றார். பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவிலேயே தொழில் பழகுநராகப் பணியாற்றினார். பயிற்சிக் காலகட்டத்திலேயே கட்டிடங்களை வடிவமைக்கத் தொடங்கிவிட்டார். நியூயார்க் நகரத்தில் விமான நிலையத்தில் டிடபுள்யூ விமான மையத்தை இவர்தான் வடிவமைத்தார்.
கட்டிட வடிவமைப்பாளராக இல்லாமல் கட்டிடப் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. யேல் பல்கலைக்கழகத்தின் கட்டிடவியல் பள்ளியின் முதல்வராக 1977-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்திலேயே சீஸர் பெல்லி அண்ட் அஸோசியட் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். தனி நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு தனது முதல்வர் பதவியைத் துறந்தார். ஆனாலும் கட்டிடவியலின் நவீனத் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தனிப்பட்ட ஆர்வத்தால் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார். கட்டிடவியல் குறித்துத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். அமெரிக்கக் கட்டிடவியல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருது உள்ளிட்ட 200 மேற்பட்ட உலக விருதுகளைப் பெற்றுள்ளார். மலேசியாவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை வடிவமைத்தவர் இவர்தான்.

ஜப்பான், மலேசியா, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் எழுந்துள்ள பல கட்டிடங்கள் அவரது கட்டிட வடிவமைப்பின் திறமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT