Published : 19 Sep 2015 10:29 AM
Last Updated : 19 Sep 2015 10:29 AM

யூடிஎஸ் கணக்கிடுவது எப்படி?

2,400சதுர அடி மனை பரப்பில் 500 சதுர அடியில் 2 வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில் 4 (750*4=3000) வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதவாது, 2,400 சதுர அடி பரப்பில் 4,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் என்ன தெரியுமா? 2400/ 4000 = 0.6. இதனைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதற்கான பிரிக்கப்படாத மனை.

அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.

பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால் மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

இப்போது நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள 2 வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள 4 வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? ஒரு வேளை கணக்குச் சரியாக வராவிட்டால், குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x