Published : 07 Mar 2015 12:06 PM
Last Updated : 07 Mar 2015 12:06 PM
பல் துறையிலும் வல்லவராக இருப்பார்கள். அவர்களால் முடியாத காரியமே இல்லை எனலாம். ஆனால் வீட்டைச் சுத்தப்படுத்துவது என வந்துவிட்டால் அலுத்துக்கொள்வார்கள்; பொறுமை இழந்து சோர்ந்துவிடுவார்கள். சிலருக்கோ வீட்டைச் சுத்தப்படுத்துவது ஒரு விருப்பமான காரியம். உடற்பயிற்சி செய்வதுபோல, தியானம் செய்வதுபோல வீட்டைச் சுத்தப்படுத்துவார்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவற்கு இப்போது தனியான பலவிதமான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை இல்லாமல் அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே வீட்டைச் சுத்தப்படுத்தலாம். இம்மாதிரியான மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதால் செலவும் குறையும், எளிதாக வீட்டைச் சுத்தப்படுத்தவும் முடியும்.
ஜன்னல்களை நாம் என்னதான் சுத்தப்படுத்தினாலும் அதன் இடுக்குகளில் அழுக்குகள் சேர்ந்துவிடும். வெங்காயத்தை வெட்டி ஜன்னல்களில் உள்ள கறைகளை துடைக்கலாம். அதேபோல மரப்பொருட்களைத் துடைப்பதற்கு தேயிலைத் தூளைப் பயன்படுத்தலாம். தேயிலைத் தூளைப் பயன்படுத்தித் துடைக்கும்போது பளபளப்புடன் மின்னும்.
சில்வர் பாத்திரங்களைக் கழுவ வாழைப் பழத் தோலைப் பயன்படுத்தலாம். தோலை நன்றாக அரைத்துப் பாத்திரங்களில் தேய்த்துக் கழுவ வேண்டும். அதேபோல் வாணலியில் கறுப்புக் கரை இருந்தால் காபித்தூளை கொண்டு தேய்த்துக் கழுவலாம்.பாத்திரம் கழுவும் தொட்டியை எலுமிச்சை பழம் கொண்டு துடைக்கலாம். அதில் உள்ள அமிலச் சாறு தொட்டியில் உள்ள அழுக்குகளைத் துடைத்துத் தொட்டியைப் பளிச்ச்சென்று வைத்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT