Published : 22 Nov 2014 04:22 PM
Last Updated : 22 Nov 2014 04:22 PM
வீட்டுக்கு அழகு சேர்க்கும் அறைகளில் பிரதானமானது வரவேற்பறை. அதில் அழகான ஓவியங்கள், பூச்செடிகள் இன்னும் பல கலைநயம் மிக்கப் பொருள்களை வைக்கலாம். அதில் ஒன்றுதான் மீன் தொட்டி. அதில் பல வண்ண அழகிய மீன்களை வளர்க்கும்போது அது கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் காண்பவரைக் கவர்வதாகவும் இருக்கும்.
வீடுகளில் மீன் தொட்டிகளில் மீன்கள் வளர்ப்பது அழகாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து பராமரிப்பதும் அவசியமானதாக இருக்கிறது. மீன் தொட்டிகளில் மீன் வளர்ப்பது, அதைப் பராமரிப்பது போன்ற பல்வேறு தகவல்களைக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் தொடங்குதல் (Getting Started), மீன் காட்சியகப் பராமரிப்பு நடைமுறைகள் (Routine Aquarium Maintenance), கருவிகள் மற்றும் வரையறைகள் (Equipment and Terms), மீன் பெறுதல் (Getting Fish), இணையதளத் தகவல்கள் (About the First Tank Guide) கேள்வி கேளுங்கள் (Ask a Question) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
மீன் காட்சியகப் பராமரிப்பு நடைமுறைகள் எனும் தலைப்பின் கீழ் உங்கள் மீன்தொட்டிகளைச் சுத்தப்படுத்துதல் (Cleaning Your Aquarium), மீனுக்கான உணவுகள் (Feeding Fish), மீன் நோய்கள் (Fish Diseases), சிறிய தொட்டிப் பராமரிப்பு (Small Tank Maintenance), வலை மீன் (Netting Fish), மீன் காட்சியக வேதியியல் (Aquarium Chemistry) எனும் துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. கருவிகள் மற்றும் வரையறைகள் எனும் தலைப்பின் கீழ் கருவி விளக்கங்கள் (Equipment Definitions) எனும் துணைத் தலைப்பு இடம் பெற்றுள்ளது.
இங்கு மீன் தொட்டி (Fish Tank), வடிகட்டிகள் (Filters), வெப்பம் வழங்கி (Heater), ஒளியிடல் (Lighting), குளிர்விப்பான் (Chiller), சரளைக்கல் வெற்றிடம் (Gravel Vacuum), காற்று ஏற்றி (Air Pump), தொட்டி (Sump), மீன் காட்சியக அழகூட்டல்கள் (Aquarium Decorations), வாளி (Bucket), துண்டு (Towel) போன்ற துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இணையதளத்தில் தொடங்குதல் (Getting Started), மீன் காட்சியகப் பராமரிப்பு நடைமுறைகள் (Routine Aquarium Maintenance), கருவிகள் மற்றும் வரையறைகள் (Equipment and Terms), மீன் பெறுதல் (Getting Fish), இணையதளத் தகவல்கள் (About the First Tank Guide) கேள்வி கேளுங்கள் (Ask a Question) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. மீன் தொட்டிகளை எப்படி அமைப்பது என்பதில் தொடங்கிப் பலவகையான தகவல்களைக் குறிப்புகளாகக் கொடுத்துள்ளார்கள். மீன் தொட்டி அமைத்தல் (Setting Up a Fish Tank), மீன் அறிமுகம் (Introducing Fish), மீன்களுடன் விடுமுறை (Vacationing with Fish), எனப் பல்வேறு துணைத் தலைப்புகளுடன் குறிப்புகள் விளக்கப்பட்டுள்ளன.
மீன் காட்சியகப் பராமரிப்பு நடைமுறைகள் எனும் தலைப்பின் கீழ் உங்கள் மீன்தொட்டிகளைச் சுத்தப்படுத்துதல் (Cleaning Your Aquarium), மீனுக்கான உணவுகள் (Feeding Fish), மீன் நோய்கள் (Fish Diseases), சிறிய தொட்டிப் பராமரிப்பு (Small Tank Maintenance), வலை மீன் (Netting Fish), மீன் காட்சியக வேதியியல் (Aquarium Chemistry) எனும் துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. கருவிகள் மற்றும் வரையறைகள் எனும் தலைப்பின் கீழ் கருவி விளக்கங்கள் (Equipment Definitions) எனும் துணைத் தலைப்பு இடம் பெற்றுள்ளது. இங்கு மீன் தொட்டி (Fish Tank), வடிகட்டிகள் (Filters), வெப்பம் வழங்கி (Heater), ஒளியிடல் (Lighting), குளிர்விப்பான் (Chiller), சரளைக்கல் வெற்றிடம் (Gravel Vacuum), காற்று ஏற்றி (Air Pump), தொட்டி (Sump), மீன் காட்சியக அழகூட்டல்கள் (Aquarium Decorations), வாளி (Bucket), துண்டு (Towel) போன்ற துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வீடுகளின் வரவேற்பறைக்கு அழகூட்டும் மீன் காட்சியகங்கள் குறித்தும், அதற்கான பராமரிப்பு குறித்தும் பல்வேறு தகவலைக் கொண்டுள்ள இந்த இணையதளம் (http://www.firsttankguide.net/) மூலம் மீன் தொட்டிகளில் மீன் வளர்ப்பு குறித்த பல பயனுள்ள தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT