Published : 17 Sep 2016 10:40 AM
Last Updated : 17 Sep 2016 10:40 AM
வீதிகளில் நடந்து செல்லும்போது தூசியும் வாகனப் புகையும் தொழிற்சாலை மாசும் கலந்த காற்றைச் சுவாசிக்கும்போது, அனிச்சையாக முகத்தை மூடிக்கொள்கிறோம். நல்ல காற்றைக்கூடச் சுவாசிக்க முடியாத சூழலை நினைத்து அலுப்பு ஏற்படுகிறது. வெளியிடங்களில் தான் சுகாதாரமற்ற காற்றைச் சுவாசிக்கிறோமா சிலவேளைகளில் நமது வாழ்விடங்களில் உள்ள காற்றுகூட சுகாதாரமற்றதாக உள்ளது என்பதை அறிகிறோமா? இன்னும் சொல்லப்போனால் வெளியே செல்லும்போது நாம் சுவாசிக்கும் நச்சுக் காற்றைவிட அதிகமாக வீட்டுக்குள்ளே நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்பது நம்மை அதிர்ச்சியூட்டும் செய்திதான்.
ஆனால் அது தான் உண்மை. கட்டிடங்களின் உள்ளே சுழலும் மாசுபாடான காற்றால் நேரிடும் உயிரிழப்பு, வெளியே உள்ள காற்றின் மாசுபாட்டால் நேரிடும் உயிரிழப்பைவிட 14 மடங்கு அதிகம் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம். இந்தப் பிரச்சினையை நாம் எப்படிச் சமாளிப்பது?
நம்மைப் பொறுத்தவரை நாம் மிகவும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபடி பாதுகாப்பான அறையில் இருக்கிறோம் எனத் தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சூழல் என்ன? அதைக் குறித்துக் கவனித்திருக்கிறோமா? நீங்கள் ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கே போதுமான வெண்டிலேஷன் உள்ளதா என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? நாம் வெளியிடும் சூடான காற்றை வெளியேற்ற போதுமான வசதி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறீர்களா? நாம் காற்றைச் சுவாசிக்கிறோம். அதிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்ஸைடு கலந்த காற்றை வெளியிடுகிறோம். அந்தக் காற்றை முறையாக வெளியேற்றவில்லை எனில் அது அறையினுள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இது நமது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
நம்மைப் பொறுத்தவரை நாம் மிகவும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபடி பாதுகாப்பான அறையில் இருக்கிறோம் எனத் தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சூழல் என்ன? அதைக் குறித்துக் கவனித்திருக்கிறோமா? நீங்கள் ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கே போதுமான வெண்டிலேஷன் உள்ளதா என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? நாம் வெளியிடும் சூடான காற்றை வெளியேற்ற போதுமான வசதி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறீர்களா? நாம் காற்றைச் சுவாசிக்கிறோம்.
அதிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்ஸைடு கலந்த காற்றை வெளியிடுகிறோம். அந்தக் காற்றை முறையாக வெளியேற்றவில்லை எனில் அது அறையினுள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இது நமது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
இது மட்டுமல்ல, பொதுவாக நாம் புழங்கும் அறைகளில், நமது அன்றாட நடவடிக்கைகளால் சுகாதாரத்துக்குத் தீங்குவிளைவிக்கும் கார்பன் அடங்கிய வேதிப்பொருள்கள் உருவாகும் சாத்தியமுள்ளது. பிரிண்ட் எடுப்பது, ஜெராக்ஸ் எடுப்பது, புகைபிடிப்பது, அறையின் சுவர்களில் பூசப்பட்டிருக்கும் பெயிண்டிங் போன்ற பல காரணங்களால் அறையின் உட்புறக் காற்றில் மாசு கலக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் வெளியே சுற்றுப்புறத்தின் காற்றைவிட 10 மடங்கு அதிகமாக அறையின் உட்புறக் காற்றில் மாசு கலந்துவிடுகிறதாம். இந்தக் காற்றைச் சுவாசித்தால் நமது உடல்நலம் என்னவாகும்? முறையான வெண்டிலேஷன் அமைத்துவிட்டால் இவற்றை ஓரளவு தவிர்த்துவிடலாம். இவற்றை முறையாக வெளியேற்றினாலே அறையின் உள்ளே ஆரோக்கியம் காப்பாற்றப்படும்..
வந்தபின் கவலைப்படாதீர்கள், வரும்முன் காத்துக்கொள்ளுங்கள். அதிக பாதிப்பில்லாத பெயிண்ட்களை விசாரித்து வாங்கிப் பயன்படுத்துங்கள். ஒட்டுவது போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களில் அதிகத் தீங்குவிளைவிப்பவை இருந்தால் அவற்றைத் தவிர்த்திடுங்கள். குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளிலும் ஆரோக்கியமான காற்று கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உயிர் வாழ சுவாசிக்கும் காற்றே நோய்களை ஏற்படுத்திவிட்டால் நமது நிலைமை என்னவாகும்? ஆகவே காற்று விஷயத்தில் கண்வையுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT