Published : 04 Jun 2016 01:24 PM
Last Updated : 04 Jun 2016 01:24 PM
புதியதாக அமைந்திருக்கும் தமிழக அரசு தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம்.
இதன்படி தற்போது உள்ள மின்கட்டணத்திற்கும் 100 யூனிட் இலவசமாக அளித்த பிறகு நாம் செலுத்த வேண்டிய மின்சாரத்திற்குமான ஒரு ஒப்பீட்டினை பார்க்கலாமா?
நாம் பயன்படுத்தும் மின் யூனிட்டில் 120 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை 150 ரூபாயும், 250 யூனிட் முதல் 500 யூனிட் வரை இரு மாதங்களுக்கொரு முறை ரூ. 200 ம் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 340 ம் மினகட்டணம் மிச்சமாகும்.
ஏற்கனவே மின்கட்டணத்திற்கு அரசு அளித்து வந்த மான்யம் ஏதும் தற்போது குறைக்கப்படாததால் இந்த அளவிற்கு மின்கட்டணம் குறைய வாய்ப்பிருக்கிறது.
மான்யத்தை அரசு குறைக்கும்பட்சத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத்தால் பயன் இருக்காது. அரசு மான்யத்தை ஏதும் குறைக்காமல் 100 யூனிட் இலவசத்தை அப்படியே தருவதால் பொதுமக்களுக்குப் பலன் கிட்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT