Published : 21 Nov 2015 12:31 PM
Last Updated : 21 Nov 2015 12:31 PM

மழைக்கால நீர்க் கசிவைத் தடுக்க...

மழைக்காலமாதலால் மொட்டை மாடியில், தண்ணீர் தேங்கி நீர்க் கசிவுப் பிரச்சினைகள் தொடங்கிவிடும். நீர்க் கசிவுகளைப் பற்றி இப்போது யோசிப்பதை விடக் கட்டுமானப் பணிகளின்போதே தடுக்க வேண்டும். அதற்கு இப்போது புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துள்ளது.

எப்படித் தடுப்பது?

கான்கிரீட்டுடன் பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix) கலவையைச் சேர்க்கும்போது அதற்கு நீர் புகுவதைத் தடுக்கும் தன்மை வரும். கான்கிரீட்டுடன் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை 0.8 சதவீதம் கலந்தால் போதுமானது. தண்ணீர்க் கசிவுத் தடுப்புக்காகப் பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. ஏற்கெனவே இடப்பட்ட கான்கிரீட்டுகளின் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம்.

ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம். மேலும் இது மிகச் சிக்கனமான முறை. பெனிட்ரான் அட்மிக்ஸ் பல சோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் தொட்டிகளில் இந்தக் கலவையைப் பயன்படுத்தி பலன் அடைந்திருக்கிறார்கள். இந்தக் கலவையைப் பயன்படுத்திய பிறகு நீர்க் கசிவு குறைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் கட்டுமானங்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும். அதனால் கட்டுமானக் கம்பிகளுக்குள் நீர் புகுந்து கம்பிகளை அரிப்பை விளைவித்துவிடும். அதனால் கட்டுமானம் எளிதில் சேதமடையும் வாய்ப்புள்ளது. பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x