Published : 14 Jan 2017 11:00 AM
Last Updated : 14 Jan 2017 11:00 AM

இயற்கையான அலங்காரம்

இயற்கையில்தான் உண்மையான அழகு இருக்கிறது. என்னதான் வீட்டுக்கு வண்ணங்கள் பூசி, டைல், கிரானைட் பதித்து அழகு உண்டாக்க முயன்றாலும் வீட்டுக்குக்கு உண்மையான அழகு இயற்கையால்தான் வரும். அதாவது அதில் சிறிய அளவெனும் செடிகளால் அலங்காரம் செய்ய வேண்டும்.

சிறிய வீடாகிலும், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடாகிலும் அந்த இடத்துக்குள் கொடிகள் வளர்க்க முடியும். செடி வளர்ப்பதாலும் கொடிகள் சுவரில் படர்வதாலும் கட்டிடத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையில் செடிகளை ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல் பாவித்து அழகாகக் கவனித்து வந்தால் அவற்றால் நம் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பு வராது.

கொடிகள் என்றதும் பந்தல் கட்ட வேண்டும் எனக் கற்பனை செய்ய வேண்டாம். இவற்றுக்காகப் பிரத்தியேகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடங்களில் படர வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் படரத் தோதான வசதிகளை ஏற்படுத்திவிட்டால் போதும். போதுமான நில வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, பெரிய தொட்டிகளில்கூட விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்த்துவிடலாம்.

பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்துத் தொங்கும். முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளைக் கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாக மலர்ந்து பார்ப்போரைக் கவரும்.

செங்குத்தான இடங்களுக்கா அல்லது கிடைமட்டப் பகுதிகளுக்கா என்பதைப் பொறுத்துத் தேவையான கொடிகளின் விதைகளை வாங்கிக் கொடிகளை வளர்த்து வீட்டை அழகுப்படுத்தலாம். வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் முன்புறச் சுவர்கள் போன்ற இடங்களிளெல்லாம் தேவைக்கேற்ப கொடிகளைப் படர விட்டு வீட்டை வண்ணமயமாக்கலாம். பூக்கள் மிகுந்த கொடிகள் வண்ணமயமான தோற்றத்தைத் தருவதுடன் நறுமணத்தையும் பரப்பும். மேலும் இதுபோன்ற கொடிகள் நம் இடத்தை அழகாக மாற்றிவிடும்.

செடி, கொடிகள் வீட்டுக்கு அழகை மட்டுமல்ல. ஒரு இயற்கையான சூழலையும் கொண்டு வந்துவிடும். அதனால் அங்கு வாழும் நமக்கும் வந்துபோகும் நம்முடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்வு பிரகாசமானதாகப் புத்துணர்வு கிடைக்கும்.

- செந்தில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x