Published : 25 Oct 2014 06:44 PM
Last Updated : 25 Oct 2014 06:44 PM
குளிர்காலத்தில் சூரியன் சீக்கிரத்தில் மறைந்துபோய் விடும். எனவே மற்ற காலங்களைவிட மழைக் காலத்தில் பகல் வேளை குறைவாகத்தான் இருக்கும். மேலை நாடுகளில் மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு பகல் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்காக அவர்கள் தங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரமாகக் கூட்டிக்கொள்வார்கள்.
அதாவது 9 மணிக்கு அலுவல் நேரம் என்றால் 8 மணிக்கே தொடங்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அதுபோல அலுவல் முடியும் நேரமும் வழக்கத்திற்கு முன்னதாக முடிந்துவிடும். இதுபோல் நாமும் சில அன்றாடப் பணிகளை முன்பே தொடங்கினால் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தலாம்.
வீட்டிற்குள்ளும் ஒளிபரப்ப இப்போது அதிக மின்சக்தி கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமல்ல. அதற்காக வெளிச்சமில்லாமலும் இருக்க வேண்டியதில்லை. அதிக மின்சக்தி பயன்படுத்தாத சீலிங் விளக்குகளைப் பயன்படுத்தலாம். அத்துடன் அழகான விளக்குகளை ஏற்றலாம்.
அவை ஒளி தருவதுடன் வீட்டின் அழகை கூட்டும். இப்போது அழகாக பலவிதமான விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. மட்பாண்ட விளக்குகளும் கிடைக்கின்றன.
விளக்குகள் இல்லாமல் மெழுகுவர்த்திகளையும் பயன்படுத்தலாம். சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை ஆகிய இடங்களில் மெழுவர்த்திகளை ஏற்றலாம். வெளிச்சத்துடன் மிதமான கதகதப்பையும் இவை தரும். விளக்குகள், மெழுவர்த்திகள் ஏற்றும்போது கவனம் வேண்டும்.
அருகில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவை மட்டுமல்லாது மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் விதமாகச் சந்தையில் பல வண்ணங்களில் கிடைக்கும் குறைந்த மின் சக்தி கொண்ட மேஜை விளக்குகளைப் பயன்படுத்தலாம். இம்மாதிரியான வழிமுறைகள் உங்கள் வீட்டை ஓர் அழகிய இல்லமாக மாற்றும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT