Last Updated : 24 Mar, 2018 10:57 AM

 

Published : 24 Mar 2018 10:57 AM
Last Updated : 24 Mar 2018 10:57 AM

படுக்கையறை அறைக்கலன்கள்

வீ

ட்டில் அழகாக இருக்கும் அறை என்பது வரவேற்பறைதான். அதைப் பார்த்துப் பார்த்து நாம் வடிவமைப்போம். ஆனால் படுக்கையறையை வடிவமைப்பதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொளவதில்லை.ஏனெனில் அது நமக்கு மட்டுமானது. அங்கு விருந்தினர் வந்து பார்க்கப்போவதில்லை.

ஆனால் படுக்கையறை என்பது நாம் மனமும் உடலும் ஆசுவாசம் கொள்ளும் அறை. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கப் பயன்படுவது படுக்கையறையே. எனவே படுக்கையறையின் விஷயத்தில் கவனத்துடன் இருந்தால் நம் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கும்.

shutterstock_120032062

படுக்கையறை என்றால் கட்டில் மட்டுமானது அல்ல. அதில் இன்னும் சில அறைக்கலன்களை வைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக படுக்கையோர மேஜை பல வகையில் பயன் தரக்கூடியது. படுக்கையறையில் அதிக வெளிச்சம் தேவையற்றது. அதனால் சிறு மேஜை விளக்கு வைத்துக்கொள்வது போதுமானது.

 அந்த மேஜை விளக்கை வைத்துக்கொள்ளும் மேஜையாக இது பயன்படும். காலையில் எழுந்துகொள்வதற்காகக் கடிகாரத்தில் அலராம் செய்துவைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்களுக்கு, அதை வைத்துக்கொள்ளும் மேஜையாக இது பயன்படும்.

இரவில் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், புத்தகங்கள் வைத்துக்கொள்ளும் அலமாரியாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மனத்தைப் புத்துணர்வு அளிக்கக்கூடிய சிலைகளை வைத்துக்கொள்ளவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்குள் வளரக்கூடிய செடிகளைக்கூட இதில் வைத்து வளர்க்கலாம். தொலைபேசி, ஏசி ரிமோட், டிவி ரிமோட் ஆகியவற்றை வைத்துக்கொள்ளவும் இதைப் பயன்படுத்தலாம்.

இதன் பயன்பாடு, வடிவமைப்பைப் பொறுத்து இதில் பல வகை உள்ளன. இதைப் போல படுக்கையறைக்கெனத் தனித்துவமான இருக்கை கிடைக்கின்றன. இது வரவேற்பறை இருக்கைகளைவிடச் சற்று தொய்வாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x