Published : 12 May 2018 11:51 AM
Last Updated : 12 May 2018 11:51 AM
வீ
டு என்றால் அதில் ஒரு சிறு பகுதியைச் சும்மா வெறுமனே போட்டுவைத்திருப்பார்கள். அந்த மாதிரி இடங்களில் செடி, கொடிககளை வளர்ப்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம். அது இப்போது மலையேறிவிட்டது.
இன்றைக்குள்ள நெருக்கடியில் வீடு கட்ட நிலம் வாங்குதே பெரும்பாடு. அப்படிக் கிடைக்கும் நிலத்தில் மாடி மேல மாடி கட்டி வாழ வேண்டிய நிலை. இந்தச் சூழ்நிலையில் செடி, கொடுகளுக்குத் தனி இடம் கொடுப்பது சாத்தியமல்ல. அதற்காக உருவாகியுள்ள இடம்தான் பால்கனி.
பால்கனியில் பொதுவாகச் செடிகளைவிடக் கொடிகளை வளர்ப்பது சுலபம். அழகாகவும் இருக்கும். அது சாதாரண மண்ணிலேயே செழித்து வளரும். இவற்றிற்கெனத் தனிக் கவனம் கொள்ளத் தேவையில்லை.
சிறு தொட்டிகளிலேயே விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்க்கலாம். பால்கனி சுவர்களிலேயே அழகாகப் படர விடலாம். பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டிக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துத் தொங்கும்.
முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளை கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாகப் பார்ப்போரைக் கவரும்.
ஜன்னலிலும் கொடிகளைப் படரவிடலாம். கொடிகள் பால்கனிச் சுவர், ஜன்னலில் படர்ந்திருக்கும் காட்சி வீட்டுக்கு வருபவர்களுன் கண்களுக்கு விருந்தாகும். உள்ளுக்குள் இருக்கும் நம் மனதுக்கும் உடலுக்கும் குளுமையைத் தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT