Published : 03 Feb 2018 10:23 AM
Last Updated : 03 Feb 2018 10:23 AM

ஜன்னல் வழியாகச் சுவாசிக்கும் வீடு

 

மூ

க்கின் வழியாக நுரையீரல் கொண்டு நாம் எப்படிச் சுவாக்கிறோமோ அதுபோலத்தான் வீடுகள். வீடுகள் ஜன்னல்களின் வழியாகச் சுவாசிக்கின்றன. இதிலிருந்து ஜன்னல்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். அதனால் ஜன்னல்களை அமைப்பது முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு வீடும் இடமும் வெவ்வேறு தேவைகளைக் கொண்டது. யார் பயன்படுத்தப் போகிறார்களோ, அவரது விருப்பங்களைப் பொறுத்துதான் வீட்டை வடிவமைக்க வேண்டும். ஒளி வரும் திசை, வெளித்தோற்றம், ஆற்றல் சேமிப்பு, போக்குவரத்து, குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கு எட்டாத உயரம் போன்றவை ஜன்னலை வடிவமைப்பதில் முக்கியமானவை.

திரைச்சீலைகள் மற்றும் கண்ணாடிக்குள் ஒளிவிடாத திரையமைப்பு ஆகியவை பண்ணை வீடுகள் போன்றவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும். நேரடியாகச் சூரிய ஒளி படும் இடங்களுக்கு ஈரடுக்கு ஜன்னல்கள் தேவைப்படும். அத்துடன் புறஊதாக் கதிரியக்கத்தைத் தடுத்து உஷ்ணத்தைக் குறைக்க, பூச்சுள்ள கண்ணாடி ஜன்னல்களையும் பயன்படுத்தலாம்.

ஒரு ஜன்னலை அலங்கரிப்பதன் வழியாக அந்த அறையின் தோற்றத்தையே மாற்றிவிடலாம். பெரிய திரைகளை ஜன்னல்களில் போட்டால் அந்த அறை பெரியது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஜன்னல் திரைகளை அறையின் கூரையைத் தொடுமாறு அமைத்து, தரைவரை தவழவிட்டால் பெரிய தோற்றம் கிடைக்கும்.

அதிகம் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல் சட்டங்களும் அடர்நிற முள்ள ஜன்னல் சீலைகளும் அறையை இருட்டாக்கி, சிறியதாகவும் தோன்ற வைக்கும். ஈரடுக்குக் கண்ணாடி ஜன்னல் வடிவமைப்புகள் அறையின் தட்பவெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும். அத்துடன் புறஊதாக் கதிரியக்கப் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். ஜன்னல் சட்டகங்கள் மரம், உலோகத்தில் இருந்தால் அறையின் கூரை வழியாகக் குளிரோ சூடோ போகாமல் தடுக்க இயலும். கண்ணாடி ஜன்னல்களில் டின்ட் பூசுவதால் திரைச்சீலைகள் சாயமிழக்காமல் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x