Published : 18 Jan 2018 05:16 PM
Last Updated : 18 Jan 2018 05:16 PM
நம்மில் பலருக்கு வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முதலீடு. புது புது கட்டுமானங்கள், புதிய மற்றும் தேர்ந்த பில்டர்ஸ் வழங்கும் பல தரப்பட்ட கட்டுமானங்கள், வசதிகள் என ஒவ்வொரு ப்ராஜக்ட்டிலும் தனித்தன்மைகளுடன் ஏராளமான சாய்ஸ் உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்போ, வில்லாவோ எதுவாகயிருந்தாலும் வீடு வாங்கும் முன் பில்டரிடம் சில அடிப்படை கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்வது மிக அவசியம்.
முந்தைய ப்ராஜக்ட், வாடிக்கையாளர்கள் பற்றி
தற்போதுள்ள சூழலில், ரியல் எஸ்டேட் துறையில் தினந்தோறும் புது புது பில்டர்ஸ் வருவதை காணலாம். இந்த துறையில் உள்ள சவால்கள், நுணுக்கங்கள் போன்றவற்றை பற்றி சரிதான புரிதல் இல்லாமல், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் இந்த துறையில் ஈடுபட வாய்புகள் அதிகம். நீங்கள் வீடு வாங்க முன் பணம் செலுத்தும் முன் பில்டரின் முந்தைய கட்டுமானத்திற்கு சென்று அதன் தரம், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டதா என்பதை அந்த ப்ராஜக்ட்டின் வாடிக்கையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நேர்மையான எந்தவொரு பில்டரும் ஒப்பந்தக்காரர்கள் பற்றிய விவரங்கள், நிதியளித்தவரகள் என எல்லா விவரங்களையும் அளிக்க தயங்குவதில்லை.
வாங்கும் வீட்டில் சிறிய மாற்றங்கள் செய்ய இயலுமா?
நமக்கு தேவையான வசதிகளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுவாக பில்டர்ஸ் வலியுறுத்திவிடுவார்கள். இருப்பினும் சில சமயம் நம் எண்ணங்களின் மாற்றமோ அல்லது அழகு வேண்டி சில மாற்றங்களை நாம் செய்யவேண்டும் என நினைப்பதுண்டு. அத்தகைய சூழ்நிலை எழுந்தால் உங்களின் ப்ராஜக்ட் மேலாளர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதிலிருந்தே பில்டரின் உண்மைதன்மையை அறிந்து கொள்ளலாம். உங்கள் பில்டரிடம் முன்பே இது போன்ற கடைசி நேர மாற்றங்கள் கூடுதல் தொகையில்லாமல் செய்து கொள்ள முடியுமா என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.
குறித்த நேரத்தில் கட்டுமானம் முடியாவிட்டால்?
இந்த கேள்வியை பல பில்டர்ஸ் விரும்புவதில்லை, அவர்களிடம் எழுத்து பூர்வமாக இதை பெறுவதும் கடினம் தான். ஆனால் நேர்மையான் அணுகுமுறை கொண்ட பில்டரின் ப்ராஜக்ட் தாமதானால் அதற்குரிய தீர்வு மற்றும் இழப்பீட்டு தொகை ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பிக்கையான பில்டரிடம் தான் உங்களின் முதலீடு செல்கிறது என்பதற்கு இது சான்றாகும்.
கட்டுமானத்திற்கு உத்திரவாதம்
லட்சக் கணக்கில் முதலீடு மட்டுமில்லாமல் வாழ்நாளில் பாதி வட்டி கட்டி கனவு இல்லம் வாங்கும் பொழுது, அதன் தரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் ஃபிட்டிங்ஸ் ஆகியவை தரமானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஸ்டீல், செங்கல், சிமன்ட், பைப், எலெக்ட்ரிகல் வயரிங், ஸ்விட்ச், குழாய் என எல்லாவற்றை பற்றியும் தெளிவாக பில்டரிடம் எழுதி வாங்கிக்கொள்வது நலம், இதன் மூலம் தரமான பொருட்களையே உங்களின் வீட்டில் உபயொக்கிறார்கள் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.
பொது மற்றும் பில்ட் அப் அளவின் தெளிவான வரையுறுத்தல்
அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் பொழுது பொது பகுதி மற்றும் பில்ட் அப் பகுதி ஆஅகியவற்றிர்கான வித்தியாசத்தை அவசியம் அறிந்திருத்தல் வேண்டும். வெளிப்புற சுவர்களுடன் உங்கள் வீட்டின் அளவை பற்றி தெரிந்து கொள்ள பில்ட்அப் பகுதி உதவும் என்பதால் ஏமாற்றமிருக்காது. ரியல் எஸ்டேட் துறையின் சில சொற்களை அறிந்து கொண்டால், ஏமாற்றத்தை தவிர்ப்பதோடு நம் முதலீட்டிற்கேற்றார் போல் சரியான சதுரடி அளவிலான வீட்டையும் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT