Published : 17 Jan 2018 01:27 PM
Last Updated : 17 Jan 2018 01:27 PM
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாறுவதென்பது மனதளவில் அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வாகும். சமயத்தில் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகவும் அமையும். அதுவும் உங்கள் குடும்பத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் ஒரு வீட்டினை தேர்ந்தெடுக்கும் முன் பலவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டியது மிக அவசியம்.
உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறம், சூழல் உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ப அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இளம் குழந்தைகளுக்கு வீட்டைச் சுற்றி நிறைய தேவைகள் இருக்கும். சற்று பெரிய குழந்தைகளுக்கு வேறு மாதிரியான தேவைகள் இருக்கும்..
எனவே, வீடு மாறும் முன் உங்கள் குழந்தைகளுக்கேற்றவாரு நீங்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளோம்.
அருகில் நல்ல பள்ளிகள் உள்ளதா?
ஒரு புதிய வீட்டை தேர்ந்தெடுக்கும் போது வீட்டின் அருகில் நல்ல பள்ளிகள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சிறிய குழந்தையாக இருந்தால் குழந்தைகளை பார்த்து கொள்வதற்கான காப்பகம் உள்ளதா என்று பார்த்துக் கொள்வது அவசியம்.
அக்கம் பக்கம் குழந்தைகள்
வீட்டை தேர்ந்தெடுக்கும் போது அக்கம் பக்கத்தில் வசிக்கும் வீடுகளில், உங்கள் குழந்தையின் வயதையொத்த குழந்தைகள் இருந்தால் சிறப்பு. குறைந்தபட்சம் அருகாமையில் விளையாட்டு திடல் / மைதானங்கள் இருந்தால் நல்லது. அடுக்குமாடி குடியிருப்பாக இருப்பின் அந்த வளாகத்தில் குழந்தைகள் பயன்பெரும் வகையில் என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
குழந்தை நல மருத்துவர்
குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் நடந்து செல்லும் தூரத்தில் குழந்தை நல மருத்துவர் இருப்பது அவசியம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீட்டின் அருகாமையில் இருக்கும் குழந்தை நல மருத்துவர்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்
ஒரு வீட்டை பார்க்க செல்கிறீர்கள் என்றால் அப்படியே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசி பாருங்கள். அது உங்களுக்கு அறிமுகத்தை ஏற்படுத்தும். மேலும் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்.
மேலும் உங்கள் குழந்தையின் வயதையொத்த குழந்தைகள் இருந்தால் அவர்களது பெற்றோரின் பரிச்சயம் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள, விளையாட அனுப்ப திட்டமிட உதவும்.
பாதுகாப்பு
ஒரு வீட்டை தேர்ந்தெடுப்பதில் பாதுகாப்பு மிக முக்கிய அம்சம் வகிக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் எவ்வளவு பாதுகாப்பனது, சாலைகளில் விளக்கு வசதி செய்யப்பட்டிருக்கிறதா, ஆள் அரவம் இருக்கிறதா, அந்த பகுதியில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா என்பனவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.
இளம் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விளையாட, சைக்கிள் ஓட்ட சுற்றுப்புறத்தில் வாகன நெரிசல் இல்லாமல் இருக்கிறதா, அந்தப் பகுதியில் குற்ற எண்ணிக்கை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
வணிக வளாகங்கள்
அருகில் காஃபி ஷாப், ஹோட்டல்கள் போன்ற வணிக வளாகங்கள் இருந்தால் குழந்தைகளை கூட்டி செல்ல ஏதுவானதாக இருக்கும். மேலும் நூலகம், கடைகள், பூங்காக்கள் போன்றவை இருந்தால் குழந்தைகளுக்கு பொழுதுபோக ஏதுவாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT