Published : 18 Jan 2018 05:16 PM
Last Updated : 18 Jan 2018 05:16 PM
அடிக்கடி வாடகைக்கு பார்த்து, மாறும் அயர்ச்சியான அனுபவத்திலிருந்து விடுதலை வேண்டுமா? இங்கே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கிருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால், நீங்கள் வீடு வாங்க தயார்...
1 - சீரான நிதி நிலைமை
உங்கள் நிதி நிலமை சீராக உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கான மாதத் தவணை போக இதர செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் என அனைத்துக்கும் உங்கள் சேமிப்பு போதுமானதா என அறிந்து கொள்ளுங்கள்
2 - உபரி சேமிப்பு
வீடு வாங்குவதென்பதே உங்கள் வாழ்வின் அதிகபட்ச செலவாக இருக்கும். வீட்டுக் கடன் மற்றும் தவணை வசதி உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால் ஒரு வீட்டை வாங்கும் போது அந்த வீட்டின் கடன் மதிப்பில் 10% - 15% முன் பணமாக செலுத்த வேண்டும். அதற்கான உபரி சேமிப்பு உங்களிடம் உள்ளதா என அறிந்து கொள்ளுங்கள்.
3 - சீரான மாத வருமானம்
மாதத் தவணை செலுத்துவதற்கு ஏற்றவாறு உங்களது மாத வருமானம் சீராக உள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். நிலையான வருமானம் இருக்கும்பட்சத்தில், அதோடு இணைந்து வருடா வருடம் வரும் போனஸும், சம்பள உயர்வும் உங்கள் கவலையை படிப்படியாக குறைக்கும்.
4 - கடன் மதிப்பெண்
உங்கள் சிபில் மதிப்பெண் சாதகமாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முன் க்ரெடிட் கார்ட் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை ஒழுங்காகக் திட்டமிட்டு கட்டியிருந்தால் நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கும். அது உங்களுக்கு வீட்டுக் கடன் தருபவரிடமும் நல்ல மதிப்பையும், நம்பிகையையும் பெற்றுத் தரும்.
5 - கடனுக்கு ஏற்ற வருமானம்
உங்கள் வருமானத்தில் 50% அளவிற்க்கு மட்டுமே நீங்கள் கடன் செலுத்தும் மாத தவணையாக வைத்து கொள்ள வேண்டும். இது உங்கள் சிபில் மதிப்பெண் மட்டுமல்லாமல் உங்களுக்கு நிதிச் சுமையையும் ஏற்றாமல் பார்த்து கொள்ளும்
6 - பொறுப்புகளை ஏற்க தயாரா?
வீட்டை வாங்குவதென்பது மாத தவணையோடு மட்டுமல்லாமல் பராமரிப்பு மற்றும் வரி ஆகியவற்றுக்கும் உங்களை பொறுப்பாக்கும். எனவே நீங்க மனதாலும் உடலாலும் அதற்கு தயாராக இருக்கிறீர்களா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
7 - நீண்ட கால திட்டம்
உங்கள் வாழ்க்கை சூழல் சவுகரியமாக இருக்கிறது, உங்களால் உங்கள் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியும் என்றால், வீடு வாங்க இது நல்ல நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
8 - உங்கள் தேவைகள் உங்களுக்கு தெரியும்
அடிக்கடி வீடு மாற்றும் தொல்லையிலிருந்து விடுதலை வேண்டுபவரென்றால், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து, உங்கள் பட்ஜெட்டுக்குள் அதை பூர்த்தி செய்ய முடிபவராக இருந்தால், அடுத்த கட்டத்துக்கு தாவ நீங்கள் தயார்.
9 - உங்கள் மற்ற வாழ்க்கை திட்டங்கள்
திருமணம், குடும்பத்துக்கான எதிர்கால திட்டம், அதிலும் உங்கள் தனிப்பட்ட குடும்பத்தை பராமரித்தல் போன்றவை அழுத்தம் தரலாம். மேலும் உங்கள் நிகழ்கால பொருளாதாரத்தை பாதிக்கலாம். எனவே இந்த திட்டங்களை பொருத்த வரை உங்களிட்ம் தெளிவு இருந்தால் நல்லது.
10 - தயார் என்று உணர்தல்
உங்கள் நிதி ஆலோசகருடன் சேர்ந்து உங்கள் நிதி நிலையை மதிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கு பிடித்தமான வீடு எது என்பதில் தெளிவுடன் இருக்கிறீர்கள். உங்கள் பட்ஜெட் பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். இனி யாரும் நீங்கள் தயாரா என்பதை சொல்லவே வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு சரி என்று சொன்னால், தயாராகுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT