Published : 16 Dec 2017 10:07 AM
Last Updated : 16 Dec 2017 10:07 AM
தூய தமிழில் காலதர் எனச் சொல்லப்படும், சாளரம் என அழைக்கப்படும் ஜன்னல்கள் காற்று நுழைவதற்கான வாசல். இதமான காற்றும் ஆரோக்கியம் அளிக்கும் வெயிலும் ஜன்னல் வழியாகத்தான் வீட்டுக்குள் வரும். இந்த ஜன்னல்களில் பல வகை உண்டு.
வளைவு வடிவ ஜன்னல்
இந்த வடிவ ஜன்னல் ஐரோப்பியக் கட்டிடக் கலையில் காணக் கூடியது. இங்கிலாந்தில் 18-ம் நூற்றாண்டில் இந்த வகை ஜன்னல்கள் முதன்முதலாக அமைக்கப்பட்டன. இவை வீட்டுக் கட்டிடத்துக்கு வெளியே புடைத்துத் தெரியும்படி உருவாக்கப்படும். அவை ஒரு வில் வடிவம் போல் இருக்கும் என்பதால் வில் வடிவ ஜன்னல் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டமான வீடுகளுக்கு இந்த வகை ஏற்றது.
இவ்வகை ஜன்னல் சமையலறைகளுக்கு ஏற்றவகை. இந்த வகை ஜன்னல்களில் கதவுகள், மேலிருந்து கீழாக சரியச் செய்வது போன்ற அமைப்பைக் கொண்டவை. அதாவது கதவு மேலிருந்து தொங்குவது போல இருக்கும். திறக்க வேண்டும் என்றால் அதை மேல் வாக்கில் தூக்க வேண்டும். அடைக்க கீழ் வாக்கில் சரியச் செய்ய வேண்டும்.
மடக்குக் கதவு ஜன்னல்
கீல் வைத்துத் திறக்கும்படியான கதவுகளைக் கொண்ட ஜன்னல். பெரும்பாலும் இந்த வகை ஜன்னல்தான் பரவலான புழக்கத்தில் உள்ளன. எல்லாவிதமான அறைகளுக்கும் ஏற்ற ஜன்னல் இது. வெப்பப் பிரதேச நாடுகளுக்கு ஏற்ற ஜன்னல் வகை இதுதான்.
பந்தல் மாதிரி ஜன்னல்
பெட்டியைத் திறப்பது போன்று மேல் புறம் கதவுகளைக் கொண்டது இவ்வகை ஜன்னல். இதன் மூடும் கதவு வெளிப்பக்கம் தள்ளுவதுபோல் இருக்கும். வெளிப்பகுதியில் பந்தல்போல் விரிந்திருக்கும். இவை வரவேற்பறைக்கு ஏற்றவை.
சித்திர வடிவ ஜன்னல்
வரவேற்பறைக்கு ஏற்ற இந்த வகை ஜன்னல்கள் வெளிக் காட்சிகளை ஒரு சித்திரம்போல் காட்டக்கூட்டியவை. கதவுகளில் குறுக்குக் கம்பிகள் அற்று இருக்கும். இது வரவேற்பறையைச் சித்திரம்போல் அலங்கரிக்கும்.
பந்தல் மாதிரி ஜன்னல்
வரவேற்பறைக்கு ஏற்ற இந்த வகை ஜன்னல்கள் வெளிக் காட்சிகளை ஒரு சித்திரம்போல் காட்டக்கூட்டியவை. கதவுகளில் குறுக்குக் கம்பிகள் அற்று இருக்கும். இது வரவேற்பறையைச் சித்திரம்போல் அலங்கரிக்கும்.
நுழைவு வாயில் ஜன்னல்
இது வீட்டின் நுழைவு வாயிலுக்கு மேலே அமைக்கப்படும் ஒரு வகை ஜன்னல். குளியலறைக்கு வெளிச்சம் வரும் கையிலும் இந்த வகை ஜன்னல் பொருத்தப்படுவதுண்டு.
நகரும் ஜன்னல்
இந்த வகை ஜன்னலின் கதவுகள் பக்கவாட்டில் இரு புறமும் நகரக்கூடியவை. இந்த வகை ஜன்னல்களைப் பராமரிப்பது கடினம். பக்கவாட்டில் நகரும் அதன் பாதையில் தூசி அடைந்துவிட்டால் திறப்பது கடினமாக இருக்கும்.
நிலையான ஜன்னல்
இவை வீட்டின் மூலையில், அல்லது வரவேற்பறையில் நிலையாக பொருத்தக்கூடியவகை. இவை கதவுகள் அற்றவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT