Last Updated : 28 May, 2023 08:03 AM

 

Published : 28 May 2023 08:03 AM
Last Updated : 28 May 2023 08:03 AM

ப்ரீமியம்
பெண்கள் 360: தாராவி தேவதை

வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் திருப்பம் ஏற்படலாம். அது ஒரு சூழ்நிலையாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். மும்பை தாராவியைச் சேர்ந்த மலீஷா கார்வாவின் வாழ்க்கையில் நடந்த திருப்பமும் அப்படியானதுதான். அமெரிக்க நடிகரும் இயக்குநருமான ராபர்ட் ஹாஃப்மன் ஒரு பாடல் படப்பிடிப்புக்காக இந்தியா வந்தார். அப்போது கரோனா தொற்றுப் பரவலால் தன் நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலையில் தாராவியில் படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்தது படக்குழு. அப்போதுதான் மலீஷாவைச் சந்தித்தார்.

கடல்புறத்தையொட்டிய பகுதியில் துணியாலான கூடாரம்தான் மலீஷாவின் வீடு. மலீஷாவுக்கு இளம் வயதிலிருந்தே ஃபேஷன் மாடல் ஆக வேண்டும் என்கிற ஆசை. அதை ராபர்ட்டிடம் கூறினாள். நடனத்திலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட மலீஷாவுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்கவும் ஊக்கப்படுத்தவும் யாரும் இல்லாதது‌ ராபர்ட்டை வருத்தப்படச் செய்தது. இந்தியாவில் பெண்களின் அழகு என்பது நிறத்தோடு தொடர்புபடுத்தப்படுவதை அறிந்த ராபர்ட் ஹாஃப்மன், மலீஷாவின் ஒளிப்படத்தையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டார். மலீஷாவின் வெள்ளந்திச் சிரிப்பும் அழகும் ஏழ்மையிலும் அழியாத கனவுகளும் பார்ப்பவர்களை ஈர்த்தன. மலீஷாவுக்காக இணையம் மூலம் நிதி திரட்டினார் ராபர்ட் ஹாஃப்மன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x