Published : 20 Nov 2016 01:22 PM
Last Updated : 20 Nov 2016 01:22 PM
கார்த்திகை, தீபங்களின் மாதம். கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதுமே சிலர் விளக்கேற்றுவார்கள்.
திசைகள், நம்பிக்கைகள்
* கிழக்குத் திசையில் விளக்கேற்றினால் துன்பம் நீங்கும். குடும்பம் அபிவிருத்தி அடையும்.
* மேற்குத் திசையில் விளக்கேற்ற, கடன் தீரும். தோஷம் நீங்கும்.
* வடக்குத் திசையில் விளக்கேற்றினால் திருமணத் தடை அகலும்.
* தெற்குத் திசை நோக்கி விளக்கேற்றக் கூடாது.
விளக்கேற்றும் எண்ணெய்க்கு ஏற்பப் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நெய்: செல்வ விருத்தி கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
நல்லெண்ணெய்: ஆரோக்கியம் அதிகமாகும்.
தேங்காய் எண்ணெய்: வசீகரம் கூடும்.
இலுப்பை எண்ணெய்: சகல காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
வேப்ப எண்ணெய்: கணவன், மனைவி உறவு நலம் பெறும். வேண்டிய உதவி கிடைக்கும்.
ஆமணக்கு எண்ணெய்: புகழ் தரும், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெயில் விளக்கேற்றக் கூடாது.
ஐந்து கூட்டு எண்ணெய்:
விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை கலந்த எண்ணெயே ஐந்து கூட்டு எண்ணெய். இதில் விளக்கேற்றினால் அம்மன் அருள் கிடைக்கும்.
கார்த்திகைப் பொரி உருண்டை
* கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதுபோலவே கார்த்திகைப் பொரி உருண்டை செய்வதும் விசேஷம். பதம் சரியாக இருந்தால் பொரி உருண்டை அருமையாக வரும்.
* எவ்வளவு பொரி இருக்கிறதோ அதே அளவு வெல்லம் இருக்க வேண்டும். கெட்டிப் பாகு நல்லது. கொதித்த வெல்லத்தை உருட்டிப் பாத்திரத்தில் அடித்தால் டங் என்ற சத்தம் வர வேண்டும்.
* அவல் பொரி உருண்டை பிடிக்கும்போது பாகைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சேர்க்க வேண்டும். வெல்லம் கெட்டிப்பாகாக வரும் முன்னே பொரியைக் கலந்துவிட்டால் உருண்டை பிடிக்க வராது.
* உருண்டை பிடிக்கும்போது கையில் சூடு பொறுத்துக்கொள்ள அரிசிமாவைத் தொட்டுக்கொண்டு பிடிக்கலாம்.
* பொரி உருண்டை செய்வதற்கு முன் வெறும் வாணலியைச் சூடேற்றி அதில் ஒருமுறை பொரியைப் புரட்டி எடுத்துச் செய்வதால், விரைவில் நமுத்துப் போகாது.
* பொரியுடன் வேர்க்கடலை, முந்திரி, தேங்காய்ச் சில்லு போன்றவற்றைக் கலந்து உருண்டை பிடிக்கலாம்.
- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT