Published : 13 Nov 2016 02:37 PM
Last Updated : 13 Nov 2016 02:37 PM

குறிப்புகள் பலவிதம்: தேன்குழல் தோசை

> பாகற்காய் பொரியல் செய்யும்போது, அதில் முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சிறிதுகூடக் கசக்காது.

> மைதாமாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கரைத்து அதில் பாலாடைக்கட்டியை நனைத்துப் பொரித்தால், வித்தியாசமான சுவையுடன் சீஸ் பஜ்ஜி கிடைக்கும்.

> வாழைத்தண்டை நறுக்கி எண்ணெயில் லேசாக வதக்குங்கள். எண்ணெயில் இரண்டு டீஸ்பூன் உளுந்து, நான்கு காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அவற்றுடன் வாழைத்தண்டு, உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள். இந்த வாழைத்தண்டு சட்னியை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

> பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு பல் பூண்டை நசுக்கி லேசாக எண்ணெயில் வதக்கி சாம்பாரில் கொட்டி, ஒரு கொதியில் இறக்கினால் கடை சாம்பார் போல மணமாக இருக்கும்.

> தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.

> புலவ், பிரியாணி போன்றவை பொல பொலவென வர வேண்டும் என்றால் அரிசியைக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்துவிட்டுப் பிறகு செய்யலாம்.

> தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது, மாவின் அளவுக்கு ஏற்ற அளவில் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்தால் வடை சுவையாக இருக்கும்.

> முளைக்கீரையை உப்பு போட்டு வேகவைத்து, தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துச் சேருங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் புளிக்காத தயிர் விட்டு, கடுகு தாளித்துச் சேர்த்தால் கீரை பச்சடி சுவையாக இருக்கும்.

> காலிப் பெருங்காய டப்பாவைப் பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால், பெருங்காயம் போடாமலேயே சாம்பார் மணக்கும்.

- கீதா ஹரிஹரன், ஆலுவா, கேரளா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x