Published : 02 Oct 2016 12:23 PM
Last Updated : 02 Oct 2016 12:23 PM
# பஜ்ஜி செய்யும்போது சிறிதளவு கடலைப் பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
# இனிப்புகள் செய்யும்போது, உதிர்ந்தவற்றை எல்லாம் சேர்த்து பால், மில்க் மெய்ட் கலந்து பாயசம் செய்யலாம்.
# தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயை முதலில் சேர்க்காமல், சர்க்கரை கம்பிப் பாகு வந்த பின் சேர்த்தால் சீக்கிரம் கெட்டியாகும்.
# உளுந்து மாவுடன், ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து பலகாரம் செய்தால் கரகரப்பாக இருக்கும்.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை.
# வீட்டில் தயாரிக்கும் ஜாம் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு ஊற்றிக் கலந்துவைக்கலாம்.
# டீத்தூளுடன் சிறிதளவு சுக்குத் தூளையும், ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்தால் டீ மணமுடன் இருக்கும்.
# வாயுத்தொல்லை நீங்க ஓமத்தை லேசாக வறுத்து, அரை பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவரலாம்.
# வெண்ணெயைக் காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டால் நெய் வாசனையாக இருக்கும்.
# காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் மென்மையாகிவிடும்.
# ரசம் கொதிக்கும்போது வெண்டைக்காயை நறுக்கிப் போட்டால் ரசம் மணமாக இருக்கும்.
# துளசி இலையை நன்றாகக் கசக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் நீங்கிவிடும்.
# நான்கு நெல் மணிகளைக் கழுவிப் பாலில் போட்டுவைத்தால் ஒரு நாள் முழுவதும் கெடாது.
- மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT