Published : 01 May 2016 02:44 PM
Last Updated : 01 May 2016 02:44 PM
எதையுமே மூன்றாவது கோணத்தில் இருந்து அணுகுவது தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டும் என்று நம்புகிறார் சங்கவி. சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவியான இவர், தன்னைக் கவர்ந்த கலையையும் தன் அடையாளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
படிப்புக்கு இடையில் கிடைக்கிற நேரத்தைத் தன் கலையார்வத்துக்கான தளமாகக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் சங்கவி. கைவினைக் கலையைப் பொழுதுபோக்காகச் செய்வதைவிட உணர்வுபூர்வமாக ஒன்றிப்போய் செய்யும் போது அதன் விளைவு கற்பனைக்கு எட்டாத அழகுடன் மிளிரும் என்று சொல்லும் சங்கவி, எளிய பொருட்களையும் கலையழகு சொட்டும் படைப்பாக்கிவிடுகிறார்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகம். காலேஜ் வந்ததும் கைவினைப் பொருட்கள், பொம்மைகள் மீது என்னோட கவனம் திரும்பியது. பத்திரிகைகளில் கைவினைப் பொருட்களின் படங்களைப் பார்க்கும்போது, நாமும் செய்யலாமேன்னு தோணுச்சு. அப்படி செய்ய ஆரம்பிச்சு, பிறகு இண்டர்நெட்டைப் பார்த்து என்னை மேம்படுத்திக்கிட்டேன். கொஞ்சம் நேரமும் பொறுமையும் இருந்தா எல்லோராலும் இதைக் கத்துக்க முடியும்” என்று சொல்லும் சங்கவி, காகிதத்தில் செய்யும் க்வில்லிங் கிராஃப்ட்டை எந்த விதமான கருவியும் இல்லாமல் செய்கிறார்.

தான் செய்கிறவற்றை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்ச்சியடையும் இவர், வேண்டாம் என்று தூக்கியெறிகிற பொருட்களில் ஒளிந்திருக்கிற கலையழகை நாம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார்.
தான் செய்கிறவற்றை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்ச்சியடையும் இவர், வேண்டாம் என்று தூக்கியெறிகிற பொருட்களில் ஒளிந்திருக்கிற கலையழகை நாம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார்.
“பயனில்லை என்று வீசிவிடுகிற பொருட்களை வைத்தும் கலைப் பொருட்களைச் செய்யலாம். இப்படிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதால் குப்பைகளின் அளவு கணிசமாகக் குறையும்” என்று சமூக அக்கறையுடன் சொல்லும் சங்கவி, இது கோடை விடுமுறை நேரம் என்பதால் பள்ளி மாணவிகளுக்குக் கைவினைக் கலையைக் கற்றுத்தரத் திட்டமிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT