Last Updated : 19 Jun, 2022 07:17 AM

 

Published : 19 Jun 2022 07:17 AM
Last Updated : 19 Jun 2022 07:17 AM

ப்ரீமியம்
பார்வை | ஆணவமா? ஆணாதிக்கமா?

ஆணவக் கொலை என்பது உலகெங்கிலும் நடைபெற்று வருகிற கொடூர நிகழ்வு. விலங்கிலிருந்து பரிணாமம் பெற்ற மனிதன் விலங்குலகத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத இந்தப் பண்பை எப்படி, ஏன் வளர்த்துக் கொண்டானோ? எவ்வளவோ நாகரிக மாற்றங்களைப் பெற்ற பிறகும் ‘கௌரவம்’ என்கிற பெயரில் ஈவு இரக்கமின்றி நடத்தப்படும் இந்தக் கொலைகள் தங்களால் நேசிக்கப்பட்டவர்கள் மீதே நிகழ்த்தப்படுகின்றன என்பது கொடுமையின் உச்சம்.

காதல் என்கிற உணர்வு இயற்கையின் நியதி. உயிரின் இயல்பு. குறிப்பாக நமது சமுதாயத்தில் எத்தனை வயதான பிறகும் பெண்ணாக இருந்தாலும் ஏன் ஆணாக இருந்தாலும் எந்தக் குடும்பமும் பிள்ளைகள் தாங்களாகத் தங்கள் இணையரைத் தேடுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதில் தங்களின் தனிப்பட்ட கௌரவம் உள்ளிட்ட குடும்ப கௌரவமும் அதற்கடுத்தபடியாக சாதி கௌரவமும் பாதிக்கப்படுவதாகவும் தங்கள் பிள்ளைகள் தங்களுக்குத் துரோகமிழைத்துவிட்டதாகவும் எண்ணி மனதுக்குள் கொந்தளிக்கிறார்கள். அவர்களை ஆட்கொள்ளும் இந்த மன சமநிலையின்மை அவர்களைக் கொலைகாரர்களாக மாற்றுகிறது. பெரும்பாலும் இந்தக் கொலைகளைச் செய்யும் கொலைகாரர்கள் இதைத் தாங்கள் செய்யவில்லை என்று மறைக்க முற்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் மானத்தை அவர்கள் செய்த கொலைகள்தாம் காப்பாற்றுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x